பெண்களுக்கு விந்து வெளியேறுமா?? : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-18)

Read Time:13 Minute, 30 Second

பெண்களுக்கு விந்து வெளியேறுமா?? : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-18)

பெண்களுக்கு விந்து வெளியேறுமா?? : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-18)
 

பெண்களுக்கு விந்து வெளிவருகிறது என்பதை இன்னமும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும், தற்போது அது உண்மை என்று பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

பெண்ணின் சிறுநீர் வடிகுழாய் பகுதியில் உள்ள சுரப்பியில் இருந்து விந்தணு சுரக்கப்படுகிறது.

இதில் குளுக்கோஸ் மற்றும் புரோஸ்டடிக் ஆசிட் போன்றவை கலந்திருப்பதுடன் அப்படியே ஆண்களின் விந்தணுவில் இருக்கும் உயிரணுவைத் தவிர அத்தனை பொருள்களும் காணப்படுகின்றன.

ஆண்களைப்போலவே பெண்களும் உச்சகட்ட இன்பம் அடையும் நேரத்தில் விந்தணுவை வெளிப்படுத்துகிறார்கள்.

பெண்களுக்குக் குழாய்போன்ற அமைப்பு இல்லாத காரணத்தால், விந்து வெளியே சீறிக்கொண்டு பாயாமல் பிறப்புறுப்பு சுவர்களில் வடிந்து வெளியேறுகிறது.

பிறப்புறுப்பு வழியாக விரல்களை நுழைத்து, பெண்ணின் கிளைட்டோரிஸ் இருக்கும் பகுதிக்கு மேலாகத் தொடும்போது பெண்களுக்கு விந்து சுரக்கும் பகுதியைக் கண்டறிய முடியும்.

இது, பெண்களுக்கு முக்கியமான ‘ஜி ஸ்பாட்’ ஆகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் விரல் விட்டு இன்பம் தரும்போது, பெண்கள் உச்சகட்டத்தை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.

நூற்றுக்கு சுமார் 30 சதவீதப் பெண்களே உச்சகட்ட இன்பத்தையும், விந்து பீய்ச்சுதலையும் உணர்ந்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள் என்பதாலே, பலர் இதை இன்னமும் நம்பாத நிலை நீடிக்கிறது.

மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா?

4811014_f520 பெண்களுக்கு விந்து வெளியேறுமா?? : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-18) பெண்களுக்கு விந்து வெளியேறுமா?? : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-18) 4811014 f520பெண்களிடம்  ஆண்களைக் கவரும் முதல் உறுப்பாக இருப்பது மார்பகங்கள் என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது.

மார்பகம் பெரிதாக இருந்தால், ஆண்கள் எளிதில் தூண்டுதல் அடைகிறார்கள்.

செக்ஸ் ஆசையை எதிராளிக்குத் தூண்டிவிடும் பணியைத் தவிர, வேறு எந்த வேலையையும் பெரிய மார்பகங்கள் செய்வதில்லை.

மார்பகங்கள் சிறிதாக இருக்கும் சில பெண்கள் அதை ஒரு குறையாக நினைத்து, உடலுறவில் தம்மால் ஆண்களை முழுமையாகத் திருப்திபடுத்த முடியாது என்று கவலைகொண்டு ஒருவித தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

கிராமத்துப் பெண்களிடம் மட்டுமல்ல, நகரத்துப் பெண்களிடமும் இதுபோல் தங்களது உடல் அமைப்பு குறித்த தவறான எண்ணங்கள் உள்ளன.

இதைத்தான்  Body இமேஜ் என்று சொல்கிறோம்.

அதாவது, நம்முடைய உடல் பற்றி  நமக்கு இருக்கும் எண்ணங்கள் மற்றும்  நம் உடல் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய நம் கற்பனை இரண்டும் சேர்ந்து இந்த எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

முக்கியமாக, உடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது.

உண்மையைச் சொல்வது என்றால், பெண்ணின் மார்பகங்களுக்கும், அது சிறிதாக அல்லது பெரிதாக இருப்பதற்கும், செக்ஸ் அல்லது குழந்தைக்குப் பாலூட்டுவதற்கோ எவ்வித சம்பந்தமும் இல்லை.

ஓர் ஆண், பெண்ணின் மீது எவ்வளவு ஆசையுடன், காதலுடன் நெருங்குகிறான் என்பதுதான் முக்கியம்.

பல சினிமா நடிகைகள், அறுவைச் சிகிச்சை மூலம் மார்பகங்களைப் பெரிதாக்கிக்கொள்கிறார்களே ? என்று கேள்வி எழலாம்.

நடிகைகளுக்குக்  கவர்ச்சியைக் காட்டி  ரசிகர்களை இழுக்க வேண்டிய கட்டாயமும், சினிமாவின் காட்சித் தேவைகளுக்காகவும் அப்படி இருக்கவேண்டி இருக்கிறது.

அதையே ஒரு சாதாரணப் பெண் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.

பொதுவாக, இதுபோன்ற பயங்களும் தாழ்வு மனப்பான்மையும் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை இல்லாத நிலையில்தான் ஏற்படுகிறது.

அதனால், தன் உடல் இன்பமயமானது என்றும், இதை வைத்து ஆண்களுக்குத் தேவையான இன்பம் தரவும், பெற்றுக்கொள்ளவும் முடியும் என்பதில் பெண்கள் உறுதியோடு இருக்க வேண்டியது அவசியமாகும்.

பெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது? ஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு, வரலாற்றுரீதியாக பெண்ணின் பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம்.

உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப் பெண்கள் 80 சதவீதத்துக்கும் மேல் இருக்கின்றனர் என்றும், அவ்வாறு அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் (Libidonal Energy), பெண்களை மனநோய்க்கு ஆளாக்கி வருகிறது என்றும் பாலியல் ஆய்வு சொல்கிறது.

மனநோய் என்பது கோபம், வக்கிரம், எரிச்சல், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதில் தொடங்கி பிள்ளைகளை அடிப்பதுவரை 40 வகைகள் எனச் சொல்கிறது அந்த ஆய்வு.

மேலும், பெண்ணை உச்சகட்டம் அடையவைப்பது தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். கிளைட்

மசாஜ் தொடங்கி ஜி ஸ்பாட் வரை அது தொடர்கிறது. ஆண்பெண் சேர்ந்து உடலுறவு மேற்கொள்ளும்பட்சத்திலும், ஒரு பெண்ணை எந்த ஆணும் உச்சகட்டத்துக்குக் கொண்டுசெல்ல முடியாது.

பெண் தானே அதை அடைவதைத் தவிர வேறு வழி இல்லை. அதாவது, ஒரு பெண் கலவியில் சுதந்தரமாக ஈடுபட்டு தன் மனநிலை மற்றும் உடலைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

அவளது உச்சகட்டத்துக்கு ஆண் உதவுவதுதான்   ஒரே சாத்தியம் அல்லது ஆண் ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும்.

ஆண்கள், புற விளையாட்டுகளில் (Foreplay) அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே பெண்கள் விரும்புகிறார்கள்.

sunakshi-nishabd-viplavam-spicy-hot-photos-stills-009 பெண்களுக்கு விந்து வெளியேறுமா?? : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-18) பெண்களுக்கு விந்து வெளியேறுமா?? : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-18) sunakshi nishabd viplavam spicy hot photos stills 009பெண் உடலை ஒரு காமம் துய்க்கும் களமாகக் (Erotic Site) கருதாமல், ஒரு பாலியல் விளையாட்டாக (Sexual Act) மாற்ற வேண்டும்.

பாலியலை நமது தன்னமைவில் இருந்து  (Ego) கழற்ற வேண்டும்.

பசி, தூக்கம் போன்று பாலுறவு என்பது மற்றொரு அடிப்படைச் செயல் (Basic Instinct) என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பாலுறவில் பெண் உச்சம் என்ற நிலையை அடைய, பாலுறவில் கட்டமைக்கப்பட்டுள்ள அனைத்து ஒழுங்கு விதிமுறைகளையும் உடைக்க வேண்டும்.

அதாவது, பலவகையான செக்ஸ் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பரவலான பயம் அற்ற புரிதல் வேண்டும். ஆண்-பெண்  இருவரும்   செக்ஸ் பற்றிய முழுமையான புரிதலுடன் சந்தோஷமாகச் செயல்படும் நிலையில், பெண் தாமதம் இல்லாமல் ஆணுடன் இணைந்து ஒரே நேரத்தில் உச்சகட்டத்தை அனுபவிக்க முடியும்.

பெண்களுக்கும் செக்ஸ் குறைபாடுகள் உண்டா?

பொதுவாக, ஆண்மைக் குறைபாடைப்போல், பெண்மைக் குறைபாடும் ஏற்படுகிறது. ஆனால், பெண்கள் அதை வெளிப்படுத்துவதில்லை அல்லது பெரிதுபடுத்துவதில்லை.

பெண்களுக்கும் செக்ஸ் உணர்வுக் குறைபாடு, உச்சகட்ட உணர்வு இல்லாமல் இருத்தல், உச்சகட்டம் ஏற்படாமை, செயல்படாதத் தன்மை, செக்ஸ் அடிமை என்று பல்வேறு குறைபாடுகள் ஏற்படுவது உண்டு.

ஆனால், பெரும்பாலும் ஆண்கள் சொல்படி பெண்கள் இயங்குவதாலும், அவர்களது செயல்பாடுகளுக்கு இசைந்துகொடுக்கும் பணி மட்டுமே செய்துவருவதாலும் இவை பெரிய சிக்கலாக எழுவதில்லை.

அதாவது, செக்ஸ் ஈடுபாடு இல்லாத பெண் என்றாலும், கால்களை அகல விரித்துக்கொண்டு பிறப்புறுப்பை மட்டும் காட்டினாலே, ஆண்களால் செக்ஸ் ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும்.

அதனால், பெண்களுக்கு ஏற்படும்    Sexual Addiction, Sex Arousm Disorder, Dyspareunia போன்றவற்றைப் பெரிதாக   எடுத்துக்கொள்வதில்லை.

ஆனால், இந்த நிலை தொடர்ந்து   இருக்கும்பட்சத்தில் மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

24-1437708833-saravanan-meenatchi567 பெண்களுக்கு விந்து வெளியேறுமா?? : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-18) பெண்களுக்கு விந்து வெளியேறுமா?? : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-18) 24 1437708833 saravanan meenatchi567பெண்களுக்கு ‘ஜி ஸ்பாட்’ எனப்படும் இன்பம் தரும் உறுப்புகள் எங்கெல்லாம் இருக்கின்றன?

ஆண்களைப்போல், பெண்களின் உடல் முழுவதும் இன்பம் இருக்கிறது.

ஆனாலும், அதிகபட்ச இன்பம் தரும் இடங்களாக உதடுகள், நாக்குகள், காது மடல், நெற்றி, மார்பகங்கள், காம்புகள், தொப்புள், தொடை, பிறப்புறுப்பு, கிளைட்டோரிஸ், ஆசனவாய், பெருவிரல் போன்ற இடங்களைச் சொல்ல முடியும்.

ஆனால், பெண் உறுப்பின் உள்பக்கத்தையே ‘ஜி ஸ்பாட்’ பகுதியாக மருத்துவம் சொல்கிறது.

பெண்கள் எந்த வயது வரையிலும் செக்ஸில் ஈடுபாடு வைத்துக்கொள்ள முடியும்?

வாழும் காலம் முழுவதும் பெண்கள் செக்ஸ் ஈடுபாடு காட்டமுடியும் என்றாலும், பெரும்பாலான பெண்கள் மெனோபாஸ் காலத்தைக் கடந்த பிறகு பிறப்புறுப்பு வழியான உறவுகளை விரும்புவதில்லை.

அதற்கு முக்கியக் காரணம், உறவுக்குத் தயாராகச் சுரக்கும் திரவங்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு சுரப்பதில்லை.

அதனால், ஆண் உறுப்பு உள்ளே சென்று வரும் சமயத்தில் எரிச்சல், வலி உண்டாக வாய்ப்பு உண்டு.

இதை ஜெல்லி அல்லது எண்ணெய் போன்ற பொருள்களின் உதவியால் தீர்த்துக்கொள்ள முடியும் என்றாலும், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஆண்களுக்கு வெளி விளையாட்டுகள் மூலம் இன்பம் தருவதுடன் தங்கள் ஆசைகளை அடக்கிக்கொள்கிறார்கள்.

ஆனால், பெண்களும் இறுதிக்காலம் வரையிலும் செக்ஸ் இன்பம் அனுபவிக்க இயலும் என்பதுதான் உண்மை.

வயது, மனம், ஆசை போன்றவற்றைப் புரிந்த ஆண் துணையாகக் கிடைத்தால், பெண் எந்த ஒரு வயதிலும் இன்பம் காண முடியும். பிறப்புறுப்பு தவிர, வயதானதும் மார்பகங்கள் தொங்கிப்போகும் நிலையில், அதை ஆண்களிடம் காட்டுவதற்கும் பெண்கள் தயங்குகிறார்கள் என்பதால், அறுபது வயதுக்கு மேற்பட்ட பெண்கள், செக்ஸ் இன்பத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல் அதில் இருந்து விடுபட்டு வருகிறார்கள்.

தொடரும்..
டாக்டர் காமராஜ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீரிழிவை துரத்துவோம்! !(மருத்துவம்)
Next post தெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு!