மகளுக்காக உயிரைக் கொடுப்பேன்… !!(சினிமா செய்தி)

Read Time:1 Minute, 48 Second

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமியை கோவிலில் வைத்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போல், குஜராத்தில் 9 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சம்பவங்களுக்கு பல்வேறு கட்சியினர் மட்டுமல்ல, பிரபலங்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகர்-நடிகைகளும் தங்கள் ஆதங்கங்களை கொட்டித் தீர்த்திருக்கிறார்கள். இணைய தளங்களில், உங்கள் பெண் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஏராளமான விழிப்புணர்வு செய்திகள் வெளியாகின்றன.

இந்த நிலையில், இந்தி நடிகை சன்னி லியோன் தனது மகள் நிஷாவின் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு அதில், ‘உன்னை இந்த உலகில் உள்ள தீங்கில் இருந்து பாதுகாப்பேன் என்று உறுதி கூறுகிறேன். உன் பாதுகாப்புக்காக என் உயிரை கொடுப்பதாக இருந்தாலும் சரி, கொடுப்பேன். குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சன்னி லியோனின் இந்த உணர்ச்சிபூர்வமான செய்தி இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீன ராணுவம் குறைந்த தூர, நீண்டதூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளின் திறனை மேம்படுத்தியது!!(உலக செய்தி)
Next post பிரின்ஸ் சார்லஸ் உடன் பிரதமர் மோடி சந்திப்பு!!(உலக செய்தி)