போர் வீராங்கனையாக மீண்டும் தமன்னா !!(சினிமா செய்தி)

Read Time:1 Minute, 46 Second

கமர்ஷியல் படங்கள் மூலமே ரசிகர்களை கவர்ந்து வந்த தமன்னா, பாகுபலி படத்தில் போர் வீராங்கனையாக நடித்திருந்தார். இப்படத்தின் 2ம் பாகத்தில் அவருக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. எனவே மீண்டும் கமர்ஷியல் படங்களுக்கு தாவினார். இந்நிலையில் அவருக்கு போர் வீராங்கனை வேடம் தேடி வந்திருக்கிறது. சிரஞ்சீவி, அமிதாப்பச்சன் இணைந்து நடிக்கும், ‘செ ரா நரசிம்மரெட்டி’ படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இதில் தற்போது மற்றொரு நாயகியாக தமன்னாவும் நடிக்கிறார். குத்துபாடலுக்கு தமன்னா ஆடலாம் என முதலில் பேச்சு எழுந்தது.

ஆனால் அவர் போர் வீராங்கனையாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. பாகுபலி 2ம் பாகத்தில் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாததை நினைத்து வருந்திய தமன்னா பின்னர் மனதை தேற்றிக்கொண்டு மற்ற படங்களில் கவனம் செலுத்தினார். பாகுபலியில் அவர் நடித்த அவந்திகா கதாபாத்திரத்தின் தொடர்ச்சியாக தற்போது சிரஞ்சீவி படத்தில் அவர் நடிக்கிறாராம். பாகுபலி 2ம் பாகத்தில் கிடைக்காமல்போன ஆக்‌ஷன் வாய்ப்பை இப்படத்தில் முழுமையாக பயன்படுத்த முடிவு செய்திருக்கிறார் தமன்னா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆஸ்திரேலியர்களை ஈர்க்கும் ஏஎப்எல் காந்தம்!(உலக செய்தி)
Next post வெளிநாட்டு இளம்பெண் மர்ம மரணம் சகோதரியின் அதிரடியால் நெருக்கடியில் கேரள போலீஸ்!!