By 29 April 2018 0 Comments

ஆடையில்லாமல் நடிக்க மாட்டேன்! கியரா சீற்றம்!! (சினிமா செய்தி)

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான M.S. Dhoni: The Untold Story மூலமாக பிரபலமானவர் கியரா அத்வானி. கடந்த வாரம் வெளியான தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் பரத் அனே நேனு மூலமாக தென்னிந்திய திரையுலகத்துக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இங்கே முதல் படமே தெலுங்கின் சூப்பர் ஸ்டாரோடு என்பதை கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. படத்துக்கு உலகெங்கிலும் இருந்து சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்துக் கொண்டிருக்கிறது. பாராட்டு மழையில் நனைந்துக்கொண்டே வானத்தில் பறக்கிறேன் என்று முகம் கொள்ளா சிரிப்போடு பேச ஆரம்பித்தார்.

பாலிவுட்டிலும் நடிக்கிறீர்கள். இந்தி நடிகைகள், அவ்வளவு சுலபமாக சவுத் பக்கம் வர மாட்டார்கள். நீங்கள் எப்படி?

எதையும் திட்டமிட்டு நான் செய்வது கிடையாது. சவுத் சினிமா நிறைய பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம் எங்க ஊர் சேனல்களில் தமிழ், தெலுங்கு படங்கள்தான் நிறைய ஓடுது. அஜீத், விஜய், மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர் படங்களின் ரசிகையாகவே நான் மாறிவிட்டேன். முதல் படமே எனக்கு பிடித்த மகேஷ்பாபு படம் என்பதால் எப்படி மறுக்க முடியும்? தென்னிந்திய சினிமாவில் அவர் பெரிய ஸ்டார்.

அவருடன் நடிக்க வந்த சான்ஸை மிஸ் செய்திருந்தால் என்னை முட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் கதை கேட்டதும் மேலும் பிடித்து போனது. அதனால் உடனே கால்ஷீட் கொடுத்தேன். அறிமுக படம்தான் நடிகையின் கேரியரில் முக்கியமானது. அந்த விதத்தில் இந்தியில் டோனி படம், தெலுங்கிலே பரத் அனே நேனு இரண்டுமே எனக்கு முக்கியமான படங்களாக, பெரிய படங்களாக அமைந்துவிட்டது.

கிளாமருக்கு முக்கியத்துவம் தந்து பாலிவுட்டில் நடித்து வருகிறீர்கள். இங்கே எப்படி?

எனது லுக் கிளாமருக்கு ஒத்துப்போகும் என்பதை புரிந்து கொண்டிருக்கிறேன். எல்லோருடைய தோற்றமும் முகமும் எல்லாவிதமான கேரக்டர்களுக்கும் பொருந்திவிடாது. எனக்கு சீரியஸான ஆர்ட் படங்களில் நடிக்க வாய்ப்பு வருமா? இப்போதைக்கு அது சிரமம்தான். அதற்காக நான் எனது திறமையை நிரூபிக்க வேண்டும். இப்போதைக்கு கமர்ஷியல் படங்கள்தான் எனது சாய்ஸாக இருக்க முடியும். ஆனால் கவர்ச்சி என்பதற்கும் ஆபாசம் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அது என்னைப் போல் எல்லா நடிகைகளுக்குமே தெரியும். எந்த நேரத்தில் கதைக்கு தேவைப்பட்டாலும் நிர்வாண காட்சியில் நடிக்க மாட்டேன். அதுபோல் வாய்ப்பு வந்தாலும் ஏற்க மாட்டேன்.

பிகினியில் நடிக்க கேட்டால்?

பிகினி காட்சி என்றால் ஒரு காலத்தில் ஆபாசமாக பார்க்கப்பட்ட நேரம் இருந்தது. அப்போது அது பரபரப்பாக பேசப்பட்டது. அந்த காலத்தில் பாபி படத்திலேயே டிம்பிள் கபாடியா பிகினியில் நடித்துவிட்டார். அதனால் அவருக்கு ஆபாச நடிகை என்ற முத்திரை விழுந்ததா? கிடையாது. நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் பல நடிகைகளுக்கு அவர் ரோல் மாடலாக இருக்கிறார். இப்போது பிகினி காட்சியெல்லாம் கவர்ச்சி எல்லைக்குள்தான் வரும். அது எல்லை மீறியது கிடையாது. கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் நான் அதுபோல் நடிப்பேன். அது எந்த மொழி படமாக இருந்தாலும் சரியே.

நடிகைகளுக்கான போட்டி களம் பெரிதாகிக் கொண்டே போகிறது. இதில் தாக்குப்பிடிக்க என்ன செய்யப்போகிறீர்கள்?

எதுவும் செய்ய மாட்டேன். நான் எதற்காக போட்டி களத்தில் குதிக்க வேண்டும்? அதற்கு நிறைய பேர் இருக்கலாம். நான் போட்டி, நம்பர் ரேஸ் எதிலுமே இல்லை. இப்போதுதான் நான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். சினிமாவை கற்று வருகிறேன். அதற்குள் என்னை சிக்க வைக்க பார்க்கிறீர்களே (சிரிக்கிறார்). நான் எல்லாவிதமான கேரக்டர்களையும் செய்ய வேண்டும். முதலில் நல்ல நடிகை என்ற பெயர் பெற வேண்டும். அதன் பிறகே மற்றது எல்லாம்.

தென்னிந்திய சினிமாவில் பிடித்த ஹீரோயின்?

இங்கு எல்லா நடிகைகளையும் எனக்கு பிடிக்கும். பலருடைய படங்களை பார்த்திருக்கிறேன். திறமை இல்லாவிட்டால் யாருமே நிலைக்க முடியாது. தென்னிந்திய சினிமாவில் ஹீரோயின்கள் நடிப்பில் மட்டுமல்ல, கேமராவுக்கு பின்னாலும் ஸ்மார்ட்டாக, நாகரிகமாக இருக்கிறார்கள்.

மகேஷ்பாபு பற்றி?

ரொம்ப அமைதியான டைப். ஆனால் அரட்டை அடிக்க ஆரம்பித்தால் செட்டே கலாட்டாவாக மாறிவிடும். சூப்பர் ஸ்டாருக்கான எந்த அடையாளமும் அவரிடம் தென்படவில்லை. ரொம்ப சிம்பிளாகவே இருப்பார். நட்புடன் பழகுவார்.Post a Comment

Protected by WP Anti Spam