ஆர்யா செமையா கலாய்ப்பாரு! சாயிஷா வெட்கம் !!(சினிமா செய்தி)

Read Time:10 Minute, 46 Second

பாலிவுட் லெஜெண்ட் திலீப்குமார் – சாயிரா பானு தம்பதியினரின் பேட்டி என்கிற விசிட்டிங் கார்டு ஒன்றே போதும். நம்ம வனமகன் சாயிஷா சைகலுக்கு இந்தியாவின் எல்லா இண்டஸ்ட்ரியிலும் சிகப்புக் கம்பள விரிப்போடு கூடிய வரவேற்புதான். இளைஞர்களை கிறங்கடிக்கும் மின்னல் வேக நடன அசைவுகள் இவரது சிறப்பு. நாகார்ஜூனா – அமலா தம்பதியினரின் மகன் அகில் அறிமுகமான தெலுங்குப் படம்தான் சாயிஷாவுக்கும் முதல் படம். அதன் பிறகு அஜய்தேவ்கனுடன் இந்தியில் ஷிவாய் என்று பயணித்து, ஏ.எல்.விஜய் இயக்கிய வனமகன் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார்.

சாயிஷாவின் வரவு இங்கே முன்னணி நடிகை களாக கோலோச்சிக் கொண்டிருக்கும் பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருப்பது அப்பட்டமான நிஜம். கார்த்தியோடு கடைக்குட்டி சிங்கம், விஜய் சேதுபதியோடு ஜூங்கா, ஆர்யாவோடு கஜினிகாந்த் என்று சாயிஷா கைவசம் வைத்திருக்கும் படமெல்லாம் ஷ்யூர் ஹிட் வகையறாதான்.’

கடைக்குட்டி சிங்கம்ல கிராமத்து பெண்ணா நடிக்கிறீங்க. இதுக்காக ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்களே…?

ஆமாம், திடீர்னு ஒரு சூழ்நிலையில இருந்து இன்னொரு சூழ்நிலைக்கு மாறணும்னா, கண்டிப்பா நிறைய கஷ்டப்பட்டுதான் ஆகணும். இதுவரை நான் பண்ணாத கேரக்டர் இது. நான் அல்ட்ரா மாடர்ன் கேர்ளா இருந்தாலும், நிறைய படங்கள்ல கிராமத்து கதைகளை பார்த்திருக்கேன். கிராமத்து பெண்ணா நடிச்ச பல ஹீரோயின்களை ஸ்கிரீன்ல பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கேன். ஆனா, நானே ஒருகட்டத்துல கிராமத்து பெண்ணா நடிப்பேன்னு நினைச்சு பார்த்ததில்லை. கடைக்குட்டி சிங்கம் படத்துல நடிச்ச பிறகுதான், கிராமத்து வாழ்க்கையை பற்றி ரொம்ப தெளிவா தெரிஞ்சுக்க முடிந்தது. என்னை நம்பி இந்த கேரக்டரை கொடுத்த டைரக்டர் பாண்டிராஜூக்கு நன்றி.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனா, அந்த கேரக்டரை பற்றிதான் முழுமையா நினைப்பேன். வசனம் என்ன, அதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டு, நானே முயற்சி பண்ணி பேசி நடிப்பேன். பிராம்ப்டிங் வேணாம்னு சொல்லிடுவேன். எவ்வளவு பெரிய டயலாக்கா இருந்தாலும், அதை நானே பேசணும்னு நினைப்பேன். கார்த்தி, பாண்டிராஜ் கூட சேர்ந்து ஒர்க் பண்ணது மறக்க முடியாத அனுபவம். என் கேரக்டரை பற்றி என்ன நினைச்சிருந்தாரோ, அதை அப்படியே நூறு பெர்சன்டேஜ் கொண்டு வந்துட்டார் பாண்டிராஜ். முதல்முறையா கார்த்தி கூட நடிச்சிருக்கேன். அவரும் எனக்கு ஷூட்டிங்கில் நிறைய டிப்ஸ் கொடுத்தார்.

தொடர்ந்து தமிழ்ப் படங்கள்ல நடிக்கிறீங்க. ஆனா, தமிழ்ல இன்னும் தெளிவா பேசலையே…?

எந்த மொழி படத்துல நடிக்கிறேனோ, அந்த மொழியை தெளிவா கத்துக்கிட்டு வசனம் பேசி நடிக்கணும்னு நினைக்கிறவதான் நான். என்கிட்ட தமிழ்ல பேசினா புரிஞ்சுக்குவேன். ஆனா, பதிலுக்கு தெளிவா பேச மாட்டேன். காரணம், இப்பதான் தமிழ் கத்துக்கிட்டிருக்கேன். அடுத்தமுறை கண்டிப்பா தமிழ்ல பேசுவேன். எல்லா மொழியையும் நல்லா கத்துக்கணும் என்ற ஆர்வம் இருக்கு.

தமிழில் ரிலீசான வனமகன் படத்துல, உங்க டான்ஸ் பெர்பாமன்ஸ் பிரமாதமா இருந்தது. எப்படி இந்தளவுக்கு உங்களால ஆட முடிந்தது?

நான் நல்லா நடிக்கிறதுக்கும், பிரமாதமா டான்ஸ் ஆடறதுக்கும் காரணம், எந்த விஷயத்தையும் உடனே கத்துக்கணும்னு நினைக்கிற என் ஆர்வம்தான். ஒரு விஷயத்துல ஈடுபட்டா, அதுல நூறு சதவீதம் வெற்றிபெறணும். புதுசா சாதிக்கணும். சின்ன வயசுலயே எல்லாவிதமான டான்ஸையும் கத்துக்கிட்டேன். இப்பவும் நேரம் கிடைச்சா டான்ஸ் ரிகர்சலுக்கு போவேன். லத்தீன் அமெரிக்கன் ஸ்டைலில் சம்பா, சல்சா டான்ஸ் தெரியும். கதக் தெரியும். சினிமாவுக்கு தேவையான டான்ஸ் தெரியும்.

லத்தீன் அமெரிக்காவுக்கு போய், அவங்களோட பாடிலாங்குவேஜையும், எப்படி டான்ஸ் பண்றாங்கன்னும் தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப ஜிம்னாஸ்டிக்ஸ் கத்துக்கிட்டிருக்கேன். உலகத்துல எந்த மூலையில எந்த டான்ஸ் அறிமுகமானாலும், உடனே அதுபற்றி தெரிஞ்சுக்கிட்டு, அதிலிருந்து நான் என்ன கத்துக்க முடியும்னு முயற்சி பண்ணுவேன். சினிமாவில் எவ்வளவு பிஸியா இருந்தாலும், டான்ஸ் பண்றதுக்குன்னு தனியா நேரம் ஒதுக்குவேன்.

ரொம்ப அழகா இருக்கீங்க. இதை எப்படி மெயின்டெயின் பண்றீங்க…

ஹா.. ஹா.. இதெல்லாம் ஒரு கேள்வியா சார்? எனிவே, பாராட்டுக்கு ரொம்ப நன்றி. ஷூட்டிங்கில் ஓய்வில்லாம நடிச்சாலும், தினமும் தவறாம ஜிம்முக்கு போய் எக்ஸர்சைஸ் பண்ண மறக்க மாட்டேன். அதுக்குப் பிறகு நீச்சலடிப்பேன். எந்த விஷயத்துக்கும் கவலைப்பட மாட்டேன். யாரைப்பற்றியும் தப்பா பேச மாட்டேன். எப்பவும் ஜாலியா, சந்தோஷமா சிரிச்சுக்கிட்டிருப்பேன். சாப்பாட்டில் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கும். எண்ணெய் இல்லாத பொருட்களை மட்டுமே சாப்பிடுவேன். நிறைய வாட்டர் குடிப்பேன். குறிப்பா, இன்னைக்கி நான் சந்தோஷமா இருக்கேன்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டிருப்பேன். இதுதான் என் அழகின் ரகசியம்.

இப்ப நடிக்கிற படங்களைப் பற்றி சொல்லுங்க…

கார்த்தி கூட நடிக்கிற கடைக்குட்டி சிங்கம் பற்றி சொல்லிட்டேன். அடுத்து விஜய் சேதுபதி ஜோடியா நடிக்கிற ஜூங்கா படத்துக்காக நிறைய நாடுகளுக்கு போய் வந்தேன். இது ரொம்ப ஜாலியான காமெடி படம். மேற்கத்திய கலாச்சாரத்தை சேர்ந்த பெண்ணா நடிக்கிறேன். வனமகன் ஷூட்டிங்கில் என்னை சந்திச்ச டைரக்டர் கோகுல், அவர் படத்துல நான்தான் ஹீரோயின்னு உறுதியா சொன்னார்.

அவர் என்மேல் வெச்சிருந்த நம்பிக்கையை காப்பாத்திட்டேன். ஷூட்டிங்கில் நான் பார்த்து ரொம்பவும் ஆச்சரியப்பட்ட நடிகர் விஜய் சேதுபதி. எந்த டயலாக்கா இருந்தாலும், அதை தனி ஸ்டைல்ல பேசி அசத்துவார். தெலுங்குல ரிலீசானபலே பலே மஹாடிவோய் படத்தோட ரீமேக்தான் கஜினிகாந்த். தமிழ் ஆடியன்சுக்கு தகுந்தமாதிரி நிறைய மாத்தியிருக்காங்க. ஷூட்டிங்கில் ஆர்யா எல்லாரையும் கலாய்ப்பார். செம ஜாலியா இருக்கும்.

எந்தமாதிரி கதைகளில் நடிக்க ஆசை?

நான் மிகப் பெரிய சினிமா குடும்பத்தை சேர்ந்தவளா இருந்தாலும், ஒருநாள் கூட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனதில்லை. நடிக்க வந்தப்புறம்தான் சினிமா கேமரான்னா என்னன்னு தெரியும். ஒவ்வொருத்தருக்கும் எதிர்காலத்துல நாம் என்ன ஆகணும்னு ஒரு குறிக்கோள் இருக்கும். ஆனா, திடீர்னு நான் ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சிட்டேன். இப்ப நிறைய படங்கள் கைவசம் இருக்கு. என்னைத்தேடி நிறைய புதுப்படங்கள் வந்தாலும், எல்லா படத்தையும் நான் ஏத்துக்க மாட்டேன். முதல்ல கதை கேட்பேன்.

அதுல என் கேரக்டருக்கு என்ன முக்கியத்துவம் இருக்கு, இதுல நான் நடிச்சா ஆடியன்ஸ் ஏத்துக்குவாங்களான்னு யோசிப்பேன். அதுக்குப் பிறகுதான் கால்ஷீட் பற்றியும், சம்பளத்தை பற்றியும் பேசுவேன். என் முதல் படம் வனமகன் ரிலீசான பிறகு தமிழ் ஆடியன்சும், மீடியாவும் என்னை தூக்கிவெச்சு கொண்டாடினாங்க. அவங்களுக்கு என் நன்றி. வித்தியாசமான கதையில் நடிக்கணும். எனக்குன்னு தனி ஸ்டைல் உருவாக்கணும். இதுதான் என் ஆசை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எல்லை பிரச்னையை தவிர்க்க இந்தியா – சீன ராணுவம் இடையே தகவல் தொடர்பு பலப்படுத்தப்படும்!!(உலக செய்தி)
Next post ஹேப்பி ப்ரக்னன்ஸி!!(மகளிர் பக்கம்)