சீன பள்ளியில் கத்திக்குத்து பலியான மாணவர்கள் எண்ணிக்கை 9 ஆனது!!
Read Time:1 Minute, 15 Second
சீனாவில் பள்ளிக்கு வெளியே முன்னாள் மாணவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் பலியான மாணவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் மிசி கவுன்டியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து மாணவர்கள் வெளிவந்தபோது, முன்னாள் மாணவர் ஒருவர் கத்தியால் குத்தினார். இதில், 7 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும், 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களில் 2 பேர் நேற்று இறந்தனர். இதனால், பலியான மாணவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கத்திக்குத்து தாக்குதலில் 20 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் சாவோ. இதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர். பள்ளியில் தனக்கு நேர்ந்த அவமானத்துக்கு பழி தீர்க்கவே, மாணவர்களை அவர் கத்தியால் குத்தியதாக விசாரணையில் தெரிந்துள்ளது.
Average Rating