பிக்பாஸ்க்கு பின்னால் நடந்த விசயத்தை வெளியிட்ட சுஜா… !!

Read Time:2 Minute, 45 Second

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படியான வரவேற்பை பெற்றது என பலருக்கும் தெரிந்திருக்கும். 100 நாட்கள் நடந்த போட்டியில் ஆரவ், சினேகன், கணேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதில் அண்மையில் அந்த சானல் பிக்பாஸ் குழுவிற்கு Pride of the channel என விருது வழங்கி சிறப்பித்தது. ஆனால் சுஜா, சினேகன், ஓவியா, ரைஸா, ஜூலி, காயத்திரி, சக்தி, கஞ்சா கருப்பு ஆகியோர் வரவில்லை.

ஆனால் அந்த சானல் பிக்பாஸ் கொண்டாட்டம் என நிகழ்ச்சியை நடத்தினார்கள். அதற்காக இதில் கலந்துகொண்ட சுஜாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அழைப்பு விடுத்தார்களாம்.

ஆனால் அவர் நான் வெளியே செல்கிறேன். எனக்கு பதிலாக என் அம்மாவை அனுப்புகிறேன் என சொல்ல, அவர்கள் வேண்டாம் என சொல்லிவிட்டார்களாம். மேலும் சுஜா கோபத்தில் இருக்கிறார்.

விசயம் என்னவெனில் பிக்பாஸ் கொண்டாட்டம் என்னும் நிகழ்ச்சியை நடத்தி எல்லோருக்கும் விருது இருக்கிறது என கூறி அழைப்பு விடுத்தார்களாம். ஆனால் சுஜாவுக்கும், கணேஷ்க்கும் சேர்த்து ஒரு விருது வழங்கினார்களாம்.

அதை கணேஷ் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என சுஜாவிடம் கொடுக்க அவரும் அதை வாங்கிக்கொண்டு மேடையை விட்டு இறங்கியதும், பெண் ஊழியர் ஒருவர் மேடம் அந்த விருதை கொடுங்க..

இன்னொருதருக்கு கொடுக்க வேண்டும் என வாங்கி சென்றுவிட்டாராம். இது சுஜாவுக்கு பெரிய அதிர்ச்சியாகியுள்ளது. இதனால் அவர் இவ்வளவு பெரிய சானலுக்கு ஒரு விருது வாங்க முடியாதா.

தனித்தனியா விருது கொடுத்தா தான் என்ன?? இது அசிங்கமா தெரியலையா?? எப்படி தான் இப்படி பண்றாங்களோ.. பிக்பாஸ் நிகழ்ச்சி எங்கள் எல்லோருக்கும் புகழை கொடுத்திருக்கிறது.

ஆனால், யாருக்கும் வெற்றியை கொடுக்கவில்லை என கடுப்புடன் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் சுஜா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்ப கால முதுகுவலி!!(மருத்துவம்)
Next post 50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்!!(அவ்வப்போது கிளாமர்)