காலா பாடல்களை இணைய தளத்தில் வெளியிட்டார் தனுஷ் !! (சினிமா செய்தி)
Read Time:54 Second
கபாலி படத்தை அடுத்து பா.ரஞ்சித் – ரஜினிகாந்த் மீண்டும் இணைந்துள்ள படம் காலா. இந்த படத்தை தனுஷின் வுண்டர் பார்ம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், காலா படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று மாலை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்க உள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், 9 பாடல்கள் அடங்கிய தொகுப்பை படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். காலா படம் ஜுன் 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating