பிரபுதேவாவை திருமணம் செய்ய தயார் : நிகிஷா பட்டேல் அறிவிப்பால் பரபரப்பு !! (சினிமா செய்தி)

Read Time:2 Minute, 19 Second

என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை நிகிஷா பட்டேல். அவர் கூறியதாவது: தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறேன். இந்தி படங்களிலும் வாய்ப்பு வருகிறது. ஆனால் முன்னணி நடிகர் ஜோடியாகவும், ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள ஸ்கிரிப்ட் வந்தால் நடிப்பேன். தமிழில் 2 வருடத்துக்கு பிறகு மீண்டும் பாண்டிமுனி படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறேன். திரையுலகில் சமீபகாலமாக காஸ்டிங் கவுச் பிரச்னை பேசப்பட்டு வருகிறது. நடிகைகள் படுக்கைக்கு உடன்பட்டால்தான் வாய்ப்பு தரப்படுவதாக கூறப்படுகிறது.

இதுபற்றி முன்பே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அப்படியொரு நிலைமை இருக்கிறது என்பது கசப்பான உண்மைதான். ஆனால் இது சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கிறது. சினிமா துறை என்பதால் வெளிச்சம்போட்டு காட்டப்படுகிறது. ஹீரோக்களில் பலரின் நடிப்பு எனக்கு பிடிக்கும். குறிப்பாக பிரபுதேவாவை மிகவும் பிடிக்கும். அவரது குடும்பமும் எங்கள் குடும்பமும் நட்பாக பழகுகிறோம்.

பிரபுதேவாவுடன் நடிப்பதுபற்றி கேட்கிறார்கள். அவரை திருமணம் செய்துகொள்ளவே நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு நிகிஷா பட்டேல் கூறி உள்ளார். திடீரென்று பிரபுதேவாவை திருமணம் செய்ய தயார் என்று நிகிஷா பட்டேல் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் அவர் சட்டப்படி மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆஹா… அரசு மருத்துவமனை!(மருத்துவம்)
Next post அம்மன் கோவிலில் விபச்சாரம் லீக் ஆனா ஆடியோ பதிவு!!( வீடியோ)