பட விழாவில் கதறி அழுத நடிகை… !!

Read Time:2 Minute, 23 Second

பாண்டிராஜ் தயாரிப்பில் வள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `செம’. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அர்த்தனா நடித்திருக்கிறார். இவர் `தொண்டன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது அப்போது நாயகி அர்த்தனா மேடையில் அழுதார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசும்போது “இயக்குநர், தயாரிப்பாளர் தொல்லையால் அர்த்தனா அழுததாக சர்ச்சை கிளம்பினாலும் கிளம்பும். அதற்கு நாங்கள் காரணம் இல்லை. படப்பிடிப்பில் அவருக்கு எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. திருமணத்துக்கு பெண்பார்க்க செல்லும் ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகளை குடும்பத்தோடு பார்க்கும் வகையில் நகைச்சுவையாக படமாக்கி உள்ளோம்” என்றார்.

பின்னர் மேடையில் அழுத காரணம் குறித்து நடிகை அர்த்தனா கூறியதாவது:-

“படப்பிடிப்பில் டைரக்டரோ, தயாரிப்பாளரோ எனக்கு தொந்தரவு கொடுக்கவில்லை. நான் அழுததற்கு காரணம் வேறு. எளிதில் நான் உணர்ச்சிவசப்படுவேன். படப்பிடிப்பில் இயக்குனரும், நடிகர்களும் கஷ்டப்பட்டதை பார்த்தேன். எல்லோருடைய வாழ்க்கையும் இந்த படத்தில் உள்ளது. அதை நினைத்து படம் நன்றாக ஓட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அழுகை வந்தது. இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக வருகிறேன். அடுத்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியுடன் நடிக்கிறேன்” இவ்வாறு அர்த்தனா கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோடைக்கால அழகு குறிப்புகள் சில..!!(மகளிர் பக்கம்)
Next post அஜீரண கோளாறை போக்கும் மாங்காய்!!(மருத்துவம்)