அரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு !!

Read Time:1 Minute, 48 Second

அண்மையில் நடைபெற்ற கர்நாடக சட்ட சபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, விதான் சவுதாவில் மஜத தலைவர் குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும் பதவியேற்றார்.

இவர்கள் இருவரை தவிர மேலும் 32 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இதில் காங்கிரஸூக்கு 22 அமைச்சர் பதவிகளும், மஜதவுக்கு 12 அமைச்சர் பதவிகளும் அடக்கம். சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு முடிவடைந்ததும் சட்டசபையில் இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையே கட்சி தாவுவதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி தங்களது உறுப்பினர்களை கடந்த 16 ஆம் திகதி முதல் விடுதிகளில் தங்கவைத்து பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை !!
Next post டிப்ஸ்… டிப்ஸ்…!!(மகளிர் பக்கம்)