காதலில் 2 முறை தோற்றேன்… !!

Read Time:2 Minute, 26 Second

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தில் நடித்து மலையாளத்தில் கண்சிமிட்டி பிரபலமான பிரியா வாரியர் அளவுக்கு ரசிகர்களை சேர்த்த ஷாலினி பாண்டேவுக்கு படங்கள் குவிகிறது. சாவித்திரி வாழ்க்கை கதை படத்திலும் வந்தார். தமிழில் தயாராகும் 100 பர்சன்ட் காதல், கொரில்லா படங்களில் நடிக்கிறார்.

சினிமாவுக்கு வந்தது பற்றி ஷாலினி பாண்டே கூறியதாவது:-

“எனக்கு சினிமாவில் நடிக்க வீட்டில் எதிர்ப்பு இருந்தது. ஐ.டி. நிறுவனத்தில் வேலை தேடும் படி நிர்ப்பந்தித்தனர். அதை மீறி நாடகங்களில் நடித்தேன். பிறகு சினிமா வாய்ப்பு தேட வீட்டில் சண்டை போட்டு விட்டு மும்பை சென்றேன். அப்போது எனது தந்தை நீ தெருவில் பிச்சைதான் எடுப்பாய் என்று திட்டினார். மும்பையில் பெண்களுக்கோ ஆண்களுக்கோ தனியாக வீடு கொடுப்பது இல்லை.

இதனால் இரண்டு ஆண்கள் இருந்த வீட்டில் நானும் இன்னொரு பெண்ணும் தங்கினோம். அந்த ஆண்கள் நல்ல குணம் உள்ளவர்கள். நன்றாக கவனித்தனர். ஒரு முறைகூட என்னை தவறாக பார்க்கவில்லை. அவர்கள் தொடர்பால் புதிய உலகத்தை பார்த்தேன்.

அர்ஜுன் ரெட்டி படம் பெரிய வெற்றி பெற்று பெயர் வாங்கி கொடுத்ததும் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். என் வாழ்க்கையில் என்ஜினீயரிங் படித்தபோதும், சினிமாவுக்கு வந்த பிறகும் 2 முறை காதல் வந்து தோல்வி அடைந்தன. அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்தபோது காதல் தோல்வியால் தவித்தேன். அப்போது கதாநாயகனுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தபோது நரக வேதனையை அனுபவித்தேன்.” இவ்வாறு ஷாலினி பாண்டே கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலியை கொன்று ஏழு துண்டாக வெட்டிய காதலன் (படங்கள்)
Next post நீண்ட நேரம் சுகத்தை அனுபவிக்க நாட்டு வயாகரா!!( வீடியோ )