ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள் !!

Read Time:1 Minute, 55 Second

காலா’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் அனிருத். படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதி ஆகி இருக்கிறது. மேலும் சிலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கின்றனர். இதில் சனந்த் ரெட்டியின் ஜோடியாக ‘எனை நோக்கி பாயும்’ தோட்டாவில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள மேகா ஆகாஷ் நடிக்கிறார். ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

ரஜினியின் ‘காலா’வை தொடர்ந்து புதிய படப்பிடிப்பு கடந்த 7-ந் தேதி தான் தொடங்கியது. டேராடூன் மற்றும் டார்ஜிலிங் என இரண்டு இடங்களிலும் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. இடைவெளி இல்லாமல் தொடர்ந்து 40 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அடுத்த கட்டமாக மதுரையில் சில காட்சிகளை படம் பிடிக்க உள்ளனர்.

படத்தில் ரஜினி, விஜய்சேதுபதி இருவருக்கும் ஜோடி கிடையாது என்றும் பிளாஷ்பேக் காட்சிகளில் நடிக்க சிம்ரன், திரிஷா, அஞ்சலி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவிதாவை நினைவிருக்கிறதா?(மகளிர் பக்கம்)
Next post ஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை..!! : (உடலுறவில் உச்சம்!! – பகுதி-12)