6 அப்பாச்சி ஹெலிகாப்டரை இந்தியாவுக்கு விற்க ஒப்புதல்: அமெரிக்க பென்டகன் அறிவிப்பு!!( உலக செய்தி)

Read Time:3 Minute, 52 Second

இந்தியாவுக்கு 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை விற்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா – அமெரிக்கா இடையே பாதுகாப்புத் துறை தொடர்பான இருதரப்பு வர்த்தகம் கடந்த 2008 முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இந்தியாவுக்கு 6, ஏஎச் 64 இ ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க வெளிவிவகாரத் துறையின் இந்த முடிவு குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு அமைப்பு அறிவித்தது. இதற்கு அமெரிக்க எம்பிக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் விரைவில் இந்த ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு விற்பனை செய்யப்படும். விற்பனை தொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியா, அமெரிக்கா இடையே வாஷிங்டனில் அடுத்தமாதம் அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன் மற்றும் அமெரிக்க அமைச்சர்கள் மைக் பாம்பியோ, ஜேம்ஸ் மேட்டீஸ் ஆகியோர் இடையே 4 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் பென்டகன் இந்த ஹெலிகாப்டர் விற்பனை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

`தீத்தடுப்பு ரேடார்கள், ஹெல்பயர் ஏவுகணைகள், ஸ்டிங்கர் பிளாக் ஐ-92 எச் ஏவுகணைகள், இருட்டில் ஊடுருவும் சென்சார் கருவிகள் என மொத்தம் 930 மில்லியன் டாலர் அளவுக்கு பல்வேறு கருவிகள் இந்தியாவுக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ெபன்டகன் கூறுகையில், `இந்த ஹெலிகாப்டர்களை வாங்குவதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புத்துறையின் திறன் அதிகரிக்கும்’ என தெரிவித்துள்ளது.இருதரப்பு பேச்சுவார்த்தை
இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார பிரச்னைகள் குறித்து அதிகாரிகள் மட்டத்திலான விரிவான பேச்சுவார்த்தை விரைவில் வாஷிங்டனில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அமெரிக்காவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான நேற்று அவர் இந்திய நிருபர்களிடம் கூறியதாவது: இரு தரப்பு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்காக தற்போது நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம். வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் மட்டத்திலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அடுத்த சில நாட்களில் அமெரிக்கா வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யோகா செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள்!!(மகளிர் பக்கம்)
Next post ‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்! (அவ்வப்போது கிளாமர்)