50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது!!
Read Time:1 Minute, 9 Second
கொஸ்லந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உனகந்த வனப்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது சட்ட விரோதமாக பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டம் ஒன்றை சுற்றிவளைத்து சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கஞ்சா தோட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் இருந்ததாகவும், அவை சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடையவை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெல்லவாய, ஊவ குடா ஓய, பலஹருவ பகுதியை சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்று (20) பண்டாரவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன் கொஸ்லந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating