கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்!(உலக செய்தி)

Read Time:2 Minute, 9 Second

கனடாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதலே மருத்துவத்துக்காக கஞ்சா பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ளது. ஆனால் போதைப்பொருளாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்ததாக தொடர்ந்து புகார் வந்தது. அத்துடன், கட்டுப்பாடுகளுடன் கஞ்சாவை பயன்படுத்த அனுமதிக்கலாம் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்த நிலையில் கனடா நாட்டில் கஞ்சா வளர்க்கவும், கேளிக்கை விடுதிகளில் முறையான அனுமதிகளுடன் கஞ்சாவை விற்பனை செய்யவும், சில கட்டுப்பாடுகளுடன் கஞ்சாவை பயன்படுத்தவும் வகை செய்யும் சட்ட மசோதா உருவாக்கப்பட்டது. இந்த மசோதா பாராளுமன்ற கீழவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. சமீபத்தில் பாராளுமன்ற மேலவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதன்பின்னர் மசோதாவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, மீண்டும் பாராளுமன்ற கீழவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 52 எம்.பி.க்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவை எதிர்த்து 29 எம்.பி.க்கள் வாக்களித்தனர். அரசின் ஒப்புதல் கிடைத்ததும், செப்டம்பர் மாதம் முதல் இந்த சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி7 நாடுகளிலேயே கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கி பயன்படுத்தவும் அனுமதி அளிக்கும் முதல் நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு!!(உலக செய்தி)
Next post நல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் !!(அவ்வப்போது கிளாமர்)