சாதிக்கணும்னா மனசும், உடம்பும் ஃபிட்டா இருக்கணும்!!(மருத்துவம்)

Read Time:3 Minute, 57 Second

கொஞ்சம் குண்டாக இருக்கிறார்’, ‘சினிமா பின்புலத்தால் நடிக்க வந்துவிட்டார்’, ‘முக பாவனைகள் சரியில்லை’ என்று சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் அளவுக்கு கடுமையாக கிண்டலடிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை. ஆனால், அத்தனை விமர்சனங்களையும் தாண்டி ‘நடிகையர் திலகம்’ மூலம் தென்னிந்திய சினிமாவின் ஒட்டுமொத்தப் பார்வையையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார் கீர்த்தி.

‘‘விமர்சனங்களை எதிர்கொள்வது ஒரு கலை. முதலில் அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்து கேட்க வேண்டும். அது உண்மையாக இருக்கும் பட்சத்திலும் மனம் உடைந்துவிடக் கூடாது. நம் பலவீனங்களை மாற்றிக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும். அதன்பிறகு வெற்றி தானாக வரும்’’ என்று வெற்றிப் பயணத்தின் ரகசியம் பற்றி இப்போது பகிர்ந்திருக்கிறார் கீர்த்தி.

குண்டு என்ற விமர்சனம்தான் ஃபிட்டாக என்னுடைய உடலை மாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தையும் கொடுத்தது என்கிறார். ‘‘பள்ளி நாட்களிலேயே நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு ‘சாம்பியன்’ பட்டம் வென்ற அனுபவம் உண்டு. ஃபிட்டாக மாற வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு மீண்டும் ஸ்விம்மிங் பயிற்சியைத் தொடங்கினேன். ப்ளஸ் சைஸில் உள்ள உடலை இரவு பகலாக ஒர்க் அவுட் செய்து சரியான வடிவத்துக்குக் கொண்டு வந்தேன்.

விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருந்த பிஸி ஷெட்யூலிலும் கார்டியோ பயிற்சிகள் மற்றும் ஸ்பின்னிங் பயிற்சிகளைத் தவற விட்டது இல்லை. வாரத்தில் ஒரு நாள் முழுவதும் ஜிம்மில் ரன்னிங், சைக்ளிங் பயிற்சிகள். இவை தவிர, பளு தூக்கும் பயிற்சிகளும் உண்டு. இவையெல்லாம் உடலின் ஃபிட்னஸுக்காக.

மன அமைதிக்காகவும், தெளிவுக்காகவும் அவ்வப்போது தியானம், வாரத்தில் ஒருநாள் யோகா செய்கிறேன். சாதிக்க வேண்டுமென்றால் உடலும், மனதும் தெளிவாக இருக்க வேண்டும் இல்லையா?’’ என்று தெளிவோடு சொல்லும் கீர்த்தியின்
உணவுப் பழக்கங்கள் இவை.

‘‘காலை உணவு வெறும் தானியங்களோடு பால் அல்லது முழு கோதுமையால் ஆன ப்ரெட் டோஸ்ட்தான் பெரும்பாலும் சாப்பிடுகிறேன். மதிய உணவு சப்பாத்தி, சப்ஜி மற்றும் காய்கறி சாலட். தூங்கச் செல்லும் மூன்று மணிநேரத்துக்கு முன்பாகவே இரவு உணவை முடித்து விடுவேன். ப்ரௌன் ரைஸ் சாதம், பருப்பு மற்றும் காய்கறி, பழங்கள் சாலட் இவ்வளவுதான் என் இரவு உணவு.

தினமும் 3 லி்ட்டர் தண்ணீர் குடிப்பதில் கவனமாக இருப்பேன். மற்றபடி மாதம் தோறும் அம்மா கேரளாவிலிருந்து அனுப்பும் ஆயுர்வேத மூலிகைகள்தான் என்னுடைய அழகு ப்ளஸ் ஆரோக்கிய ரகசியம்’’ என்கிறார் இந்த ஃபிட்னஸ் திலகம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் அழகான ஆபத்துகள் .!(வீடியோ)
Next post Live TV-யில் சிக்கிய முதல் கடல் கன்னி😱 | கடல் கன்னிகள் இவ்வளவு அழகா!!(வீடியோ)