பாலியல் கொடுமை : ரஜினி ஹீரோயின் எதிர்ப்பு !!(சினிமா செய்தி)
Read Time:1 Minute, 20 Second
ராதிகா ஆப்தே முதல் பல்வேறு நடிகைகள் திரையுலகில் பட வாய்ப்புக்காக பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப் படுவதாக பகிரங்கமாக கருத்து கூறி வருகின்றனர். காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்தவர் ஹீமா குரோஷி. தற்போது தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். பாலியல் சர்ச்சை குறித்து அவர் கூறும்போது,’பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் மிருகங்கள் எல்லா துறையிலும் உள்ளனர்.
அதற்கு திரையுலகம் விதிவிலக்கல்ல. ஆனால் அப்படியொரு பிரச்னையில் சிக்க நேரும்போது அதை எதிர்த்து சம்பந்தப் பட்ட நடிகைகள் குரல் கொடுக்க வேண்டும். அதேசமயம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். எந்தவொரு பெண் அதுபோன்ற பிரச்னைகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறாரோ அப்போதுதான் அவர்களது குணநலன்பற்றிய விவரமும் தீர்மானிக்கப்படுகிறது’ என்றார்.
Average Rating