ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவரின் மகன் பலி !!

Read Time:1 Minute, 18 Second

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவராக இருந்து வருபவர் அபுபக்கர் அல் பாக்தாதி. இவரது மகன் ஹுதய்ஃபா அல் பத்ரி, அல் பக்தாதியை கொல்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியின் மகன் ஹுதய்ஃபா அல் பத்ரி, போரில் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தகவல் தொடர்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஹாம்ஸ் நகரில் உள்ள அனல்மின் நிலையப் பகுதியில் ரஷ்யா மற்றும் நுசரியா படையினருக்கு எதிராக நடைபெற்ற போரில் ஹுதய்ஃபா அல் பத்ரி உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது.

நுசரியா என்பது சிரியா ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் சார்ந்துள்ள சிறுபான்மை மதப்பிரிவினரை குறிப்பதற்காக ஐ.எஸ். இயக்கம் பயன்படுத்தும் சொல் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post High Sugar… Bad cholesterol… Chemical flavours… கலப்பட ஐஸ்க்ரீம்… கணக்கில்லாத ஆபத்து!( மருத்துவம்)
Next post சுருக்கம் போக்கும் சிகிச்சை!!( மகளிர் பக்கம்)