வீகன் டயட்!!(மருத்துவம்)

Read Time:12 Minute, 22 Second

பெரும்பாலான வாழ்க்கைமுறை நோய்களைத் தவிர்ப்பது என்பது சாத்தியமே என்கின்றனர் தாவர உணவியல் நிபுணர்களும், மருத்துவர்களும். ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை இதற்கு மிகவும் உதவியாக அமையும். தாவர உணவுகளை அடிப்படையாகக் கொண்ட உணவுமுறை குறித்தும் அதன் பலன்கள் குறித்தும் பல ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் சில முக்கியமான ஆய்வுகளின் முடிவுகளைக் காண்போம்.

காய், கனிகள், கீரைகள், முழு தானியங்கள், பயறு மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட முழுமையான தாவர உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 34% குறைவதாக ஹார்வர்டு டி.எச் சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. குறைந்த கொழுப்பு மற்றும் கிளைசெமிக்இண்டெக்ஸ்(Glycemic Index) குறைவாக உள்ள வீகன் உணவுமுறை(Low fat vegan diet) ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுவதாக டாக்டர் நீல் பர்னார்ட் செய்த ஆய்வில் தெரியவந்தது.

உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்து செய்யப்பட்ட கோஹோர்ட் ஆய்வுகளில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது EPIC OXFORD ஆய்வு. 65 ஆயிரத்து 500 பேர் பங்கேற்ற மிகப்பெரும் ஆய்வு இது. இந்த ஆய்வில் வீகன் டயட் கடைப்பிடித்தவர்களுடைய பி.எம்.ஐ(BMI) சீராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.வீகன் உணவுப்பழக்கம் உள்ளவர்களது ரத்த அழுத்தமும் சீராக இருப்பதும் கண்டறியப்பட்டது. வீகன் உணவுமுறையைப் பின்பற்றும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகதெரிவிக்கிறது இந்த ஆய்வு முடிவு. அதேபோல ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவுதான் என்கிறது இந்த ஆய்வு.

டைப் 2 சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய், கார்டியோ வாஸ்குலர் இதய நோய் போன்றவை ஏற்படாமல் தவிர்ப்பதற்கு வீகன் டயட் உதவியாக இருக்கும் என்று லோமா லிண்டா பல்கலைக்கழக ஆய்வு குறிப்பிடுகிறது. ஆரோக்கியமான வீகன் டயட்டை கடைப்பிடிப்பவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 60% குறைவதாக AHS 2 என்னும் ஆய்வு தெரிவிக்கிறது.முழுமையான தாவர உணவுகளை அடிப்படையாகக் கொண்ட உணவுமுறை சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்றவற்றுக்கான காரணிகளைக் குறைப்பதாக கனடியன் ஜர்னல் ஆஃப் டயடெட்டிக் ப்ராக்டிஸ் மற்றும் ரிசர்ச்(Canadian journal of dietetics & research) இதழில் வெளியான சிப் புரோக்ராம்(CHIP Program) ஆய்வு தெரிவிக்கிறது. ஐரோப்பியன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கில் நியூட்ரிஷன்(European Journal of Clinical Nutrition) இதழில் வெளியான ஆய்வு ஒன்று, வீகன் டயட் கடைப்பிடிப்பவர்களிடையே டோட்டல் கொலஸ்ட்ரால் மற்றும் அபோலிபோபுரோட்டீன் பி (Apolipo protein B) அளவுகள் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கிறது.

Low fat plant based diet என்று சொல்லக் கூடிய வீகன், இதய நலம் காக்க உதவுவதாக டாக்டர் கால்டுவெல் எஸ்செல்ஸ்டைன் செய்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அதேபோல டாக்டர் டீன் ஆர்னிஷ் செய்த ஆய்வும் இதய நலம் காக்க தாவர உணவு, உடற்பயிற்சி மற்றும் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் பயிற்சிகள் உதவுவதாகத் தெரிவிக்கிறது.இவற்றைப்போல இன்னும் பல ஆய்வுகள் வீகன் உணவு முறையின் நன்மைகளைப் பட்டியலிடுகின்றன. முழுமையான தாவர உணவுகளில் நிறைந்துள்ள நார்ச்சத்து உடல் எடையைக் குறைக்கவும், ரத்தத்தில் சர்க்கரை அளவினைக் குறைக்கவும் உதவும். தாவர உணவுகளில் கொலஸ்ட்ரால் சிறிதும் இல்லை. மாறாக ஒமேகா 3 போன்ற நன்மை தரும் கொழுப்புகள் நிறைய உள்ளன.

பழங்கள் காய்கறிகள் மற்றும் கீரைகளில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், பிளான்ட் ஸ்டீரால்ஸ்(Plant sterols), பைட்டோ நியூட்ரியன்ட்ஸ்(Phytonutrients) மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இதயத்தின் ஆரோக்கியத்துக்கு ஏற்றவை. ஐசோபிளவோன்ஸ்(Isoflavones), ஐசோதயோசயநெட்ஸ்(Isothiocyanates), ரெஸ்வெராட்ரால்(Resveratrol), லிக்னின்ஸ்(Lignins), லைகோபீன்(Lycopene) போன்ற பைட்டோ நியூட்ரியன்ட்கள் சிலவகை புற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்க உதவும்.

பெரும்பாலான வாழ்க்கைமுறை நோய்களைத் தவிர்க்கவும், ஒருசில நோய்களைக் கட்டுப்படுத்தவும் இந்த தாவர உணவுமுறை உதவியாக அமையும் என்பது இதுபோல பல மருத்துவர்கள், உணவியல் நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
உடல் பருமன் என்பது ஒரு உலகளாவிய சவாலாக உருவெடுத்திருக்கிறது. இது அழகியல் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்தையும்நிர்ணயிக்கக் கூடியது. அதிக உடல் எடை ஆபத்துதான். அதிக உடல் எடை உடையவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகரித்தல், சில வகை புற்றுநோய், பித்தப்பை கற்கள், ஃபேட்டி லிவர், மூட்டு வலி, ஸ்லீப் ஏப்னியா போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உடல் எடையைக் குறைப்பதற்காகப் பலரும் பல முயற்சிகள் செய்வதை நாம் பார்க்கிறோம். சிலர் கடுமையான உடற்பயிற்சிகள் செய்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாட்டினைக் கடைப்பிடிக்கிறார்கள். உணவின் அளவைக் குறைத்து கலோரிகளைக் கணக்கிட்டு கட்டுப்பாட்டுடன் உண்பது மிகவும் சிரமம்தான். இன்னும் சிலர் எடைக்குறைப்பு என்ற பெயரில் புரோட்டீன் சப்ளிமென்ட்களும், மாஜிக் மருந்துகளும் சாப்பிட்டு தங்கள் உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.எவ்வளவு முயன்றாலும் ஏறிய எடையைக் குறைப்பது அவ்வளவு சுலபமானதாக இல்லை என்பது பலரது அனுபவம்.ஆனால், இவ்வளவு கஷ்டப்படாமல் எளிமையாக உடல் எடை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு நல்ல வழி ஆரோக்கியமான வீகன் டயட்டைபின்பற்றுவதுதான்.

சவுத் கரோலினா பல்கலைக்கழகத்தின் அர்னால்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நடத்திய ஆய்வு ஒன்று அசைவ உணவு உண்பவர்களைவிட தாவர உணவுகள் உண்பவர்கள் உடல் எடையை எளிதாகக் குறைக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்திருக்கிறது. 6 மாதங்கள் நடந்த இந்த ஆய்வில் வீகன் டயட்டை கடைப்பிடித்தவர்கள் கிட்டத்தட்ட 16.5 பவுண்ட் எடை குறைக்க முடிந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.அது மட்டுமல்ல உடலில் உள்ளசாச்சுரேட்டட் கொழுப்பின் அளவும், பி.எம்.ஐ-ம் குறைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த ஆய்வில் பங்குபெற்ற வீகன் உணவுப் பழக்கமுடையவர்கள் அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த தானியங்களைச் சாப்பிட்டபோதும் எடைக்குறைப்பு சாத்தியமாயிற்று என்பதுதான். இவர்கள் கலோரிகளைக் கணக்கிட்டு உண்ணவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.அமெரிக்காவின் பிசிசியன்ஸ் கமிட்டி ஃபார் ரெஸ்பான்சிபிள் மெடிசின் அமைப்பு நடத்திய ஆய்வும் வீகன் டயட் உட்கொண்டவர்களுடைய எடை குறைந்ததை நிரூபித்தது. அசைவம், பால் மற்றும் முட்டை போன்ற உணவுகளிலும், ஜங்க் உணவுகளிலும்தான் அதிக கலோரிகளும், கொழுப்புகளும் உள்ளன. மாறாக முழுமையான தாவர உணவுகளில் கலோரிகள் குறைவாகவே உள்ளன. தாவர உணவுகளில் நிறைந்துள்ள நார்ச்சத்து சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணர்வளிக்கிறது. நார்ச்சத்து தாவர உணவுகளில் மட்டுமே உள்ளது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, வீகன்டயட்டை கடைப்பிடிப் பவர்கள் கலோரி கணக்கு பார்த்துச் சாப்பிட வேண்டியதில்லை. கார்போஹைட்ரேட்டை கண்டு அச்சப்படத் தேவை இல்லை. தவிர்க்க வேண்டியது மைதா, வெள்ளை அரிசி போன்ற ரீபைன்ட் கார்போஹைட்ரேட்களைத்தான். தானியங்களில் நிறைந்துள்ள காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் உடலுக்குத் தேவையானதுதான்.வீகன் டயட்டைப் பின்பற்றும்போது உணவின் அளவைக் குறைக்க வேண்டிய தேவையும் இல்லை. இயற்கையான முறையில் உடல் எடையைக் குறைக்கலாம். அதுமட்டுமல்ல நமக்கு விருப்பமான வீகன் உணவுகளை ஆரோக்கியமான முறையில் சமைத்து உண்டும் மகிழலாம்.

வீகன் வெள்ளரி ராய்தா

ஆரோக்கியமான வீகன் உணவுகளை சமைத்து, ருசித்துப் பாருங்கள்!

தேவையான பொருட்கள்
தேங்காய்ப்பால் : 200 மிலி
எழுமிச்சை சாறு : 1 மேசைக்கரண்டி
வெள்ளரிக்காய்
பொடியாக நறுக்கியது : 1/4 கப்
புதினா இலை நறுக்கியது : சிறிதளவு
உப்பு : தேவைக்கேற்ப
சோம்புத்தூள் : 1/2 தேக்கரண்டி
செய்முறை : தேங்காய்ப்பாலுடன்

எலுமிச்சைசாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். உடனடி வீகன் தயிர் தயார். இத்துடன் வெள்ளரிக்காய் துண்டுகள், சோம்புத்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும். புதினா இலை தூவி பரிமாறவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழும் குழந்தையை சமாளிக்கும் முறை!!(மருத்துவம்)
Next post பெட்ரோல் போட வந்த பெண்ணுக்கு நடந்த விபத்தை பாருங்கள் !!(வீடியோ)