அமெரிக்காவை தனிமைப்படுத்தும் ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பு!!(கட்டுரை)

Read Time:8 Minute, 22 Second

கடந்த ஏழு தசாப்தங்களாக, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான செயற்பாடுகளை ஐக்கிய அமெரிக்காவே வகித்திருந்துள்ளது. அமெரிக்காவின் வழமையான இராணுவ வல்லமை மற்றும் கட்டமைப்பு, அணுசக்தி ஆயுதங்கள், மற்றும் அத்லாண்டிக் சமுத்திரத்தை சூழவும் அமைத்துக் கொண்ட இராணுவத் தளங்கள் மூலம் குறித்த பாதுகாப்புக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த பாதுகாப்பு உத்தரவாதமானது பெரும்பாலும் வொஷிங்டனுக்கும் இலண்டனுக்கும் இடையேயான உறவின் அடிப்படையில், குறிப்பாக 1949இல் நேட்டோவை உருவாக்குவதன் மூலம் தீர்மானிக்கப்பட்டதெனலாம். இதன் பிரதிபலனாகவே, ஐக்கிய இராச்சியம் உலக இராணுவ அதிகாரத்தின் பட்டியலில் இரண்டாமிடத்தை தக்கவைத்திருந்தது.

நேட்டோவை பொறுத்தவரை அது வட அத்லாண்டிக் ஒட்டுமொத்த பாதுகாப்புக்குமான ஓர் அமைப்பாக உருவாக்கப்பட்ட போதிலும், அதன் பாதுகாப்பு செலவீனங்களில் 75% சதவீதமான செலவீனங்கள் அமெரிக்காவாலேயே வழங்கப்படுகின்றமை அவதானிக்கத்தக்கது. இது மேலாதிக்கமாக அமெரிக்காவின் செல்வாக்கை குறித்த பிராந்தியம் முழுவதும் தக்கவைத்துக்கொள்ள உதவியதெனலாம்.

எது எவ்வாறிருந்தபோதிலும், கடந்த தசாப்தத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தனது பாதுகாப்பு தொடர்பில் தானாகவே ஒரு பிராந்திய பாதுகாப்பு வல்லரசாக தன்னை உருப்பெற முனைக்கின்றது. இரண்டாம் உலக யுத்தத்தின் காரணமாக ஐரோப்பாவில் ஏற்பட்ட அழிவு மற்றும் பொருளாதார வீழ்ச்சி என்பனவற்றில் இருந்து ஐரோப்பா மீளெழுந்ததுடன், இன்றைய காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் உலகளாவியரீதியில் முதன்மையாக வர்த்தக மற்றும் நிதி பரிவர்த்தனை மையமாக உள்ளது. மேலும், பகிரப்பட்ட நிதியக் கொள்கைகள், வர்த்தகம் மற்றும் இதர பிராந்திய உறவுகளை அதிகரிக்கும் உறுதிப்பாட்டுடன் ஐரோப்பிய ஒன்றியம் முன்னேறுவதே, அதன் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்காவை தவிர்த்து சொந்த பாதுகாப்புத் தீர்மானங்களை மேற்கொள்ளுதல் தொடர்பான அதன் அண்மைக்கால போக்கு அமைந்துள்ளது.

இதன் ஒரு பகுதியாகவே கடந்த 12 மாதங்களில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் மாநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய இராணுவக் கட்டமைப்பை நிறுவுதல் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் பெருமளவில் இடம்பெற்றுள்ளமை அவதானிக்கத்தக்கது. மேலும், இதனடிப்படையிலேயே, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையில் நிரந்தர பாதுகாப்புக் கட்டமைப்புக்கான ஒப்பந்தம் (PESCO) ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதன்படி கூட்டு பாதுகாப்புத் திறன்களை வளர்த்துக்கொள்ளுதல், இராணுவத் தளங்கள், ஆயுத உற்பத்தி மற்றும் இராணுவ செயலாக்க திட்டங்களில் இணைந்து முதலீடு செய்தல், மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழான நாடுகளுக்கு இடையில் ஒரு கூட்டு கட்டமைப்பை உருவாக்குதல், அதன் மூலமாக ஐரோப்பிய இராணுவ த்தளங்களை வலுப்பெற செய்தல், குறிப்பாக இணையத்தளம் மூலமான குற்றங்கள் மற்றும் இதர தீவிரவாதத்துக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொள்ளதல் என்பன தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையை அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பன விரும்பவில்லை என்பதுடன், இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த அமெரிக்க பாதுக்காப்பு துறை துணைச் செயலர், ஐரோப்பிய ஒன்றியம் நேட்டோவின் தாற்பரியத்தின் கீழ் தொடர்ச்சியாக இருக்கும் வரையிலே குறித்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் என கூறியிருந்தார். ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றில் பாதுகாப்புக்கான சபை இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், நேட்டோவின் தகைமை ஒருபோதும் கேள்விக்கு உட்படுத்தலாகாது என தெரிவித்திருந்தது. இதன் ஒரு விளைவாகவே அமெரிக்க ஜனாதிபதி 2017இல் நடைபெற்ற நேட்டோ மாநாட்டின்போது அமெரிக்கா இனிமேலும் பெருமளவிலான செலவை ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்தருந்தமை கவனிக்கத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதியின் குறித்த கருத்துக்கு பின்னராக ஐரோப்பிய ஒன்றியம் தனது ‘ஐரோப்பாவின் இராணுவ தலையீடு’ எனும் தொனிப்பொருளிலான ஒரு இராணுவக் கட்டமைப்பை நிறுவியுள்ளது. இது பிரான்ஸ் ஜனாதிபதி மக்கரோன், ஜேர்மனிய சான்செலர் மேர்கல் ஆகியோரின் தலைமையில் கடந்தாண்டு நவம்பரில் நிறுவப்பட்டது. இது 2019ஆம் ஆண்டளவில் நேட்டோவுக்கு இணையான ஒரு இராணுவ அமைப்பாக விளங்கும் என ஐரோப்பிய இராணுவ மையம் தகவல் வெளியிட்டமையும் அவதானிக்கத்தக்கது.

இந்நிலையிலேயே, ஐக்கிய இராச்சியத்தின் இணைந்த பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் கேள்விக்குறியாகி உள்ளது. ஐக்கிய இராச்சியம் நேட்டோவில் அங்கம் வகிக்கும் போதிலும், ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய பாதுகாப்பில் அதன் கட்டமைப்பில் வெகுவாகவே செல்வாக்கு செலுத்தவே விரும்புகின்றது. பிரெக்ஸிட்க்கு பின்னராக காலப்பகுதியிலும் தனது செல்வாக்கை தக்கவைக்கவே விரும்பும் ஐக்கிய இராச்சியம், அதன் பொருட்டே ஐரோப்பா – ஐக்கிய இராச்சியம் இணைந்த பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் சுமார் 13 மில்லியன் யூரோவை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்க முன்வந்துள்ளது. இது அண்மையில் பிரெக்ஸிட் தொடர்பான உரையாடலில் பேசப்பட்ட விடயங்களில் ஒன்றாகும். மேலும், கனடா மற்றும் ஜப்பான் ஆகியவையும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்த பாதுகாப்பு நிலைமைகளை பேணவே விரும்புகின்றது. இந்நிலையே தொடருமாயின், அமெரிக்கா பாதுகாப்பு தொடர்பிலும் தனித்துவிடப்படும் நிலைக்கு சென்றுவிடும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூக்கம் குறைந்தால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஆண்களால் எத்தனை முறை உறவுகொள்ள முடியும்? : (உடலுறவில் உச்சம்!! – பகுதி-16)