ஒமேகா என்பது என்ன?!(மருத்துவம்)

Read Time:7 Minute, 32 Second

உணவியல் நிபுணர்களும், மருத்துவர்களும் அடிக்கடி குறிப்பிடுகிற வார்த்தைகளில் ஒன்று ஒமேகா. மருத்துவ இதழ்களின் கட்டுரைகளிலும் இந்த ஒமேகா அதிகம் இடம் பெறுவதைக் கவனித்திருப்பீர்கள். இந்த ஒமேகாவுக்கு நம் ஆரோக்கியத்தில் அப்படி என்ன முக்கியத்துவம்?!

* ஒமேகா(Omega) என்பது நன்மை செய்யும் கொழுப்பு அமில வகையைச் சேர்ந்தது. இந்த வகை கொழுப்பு அமிலத்தை நமது உடலில் உருவாக்க முடியாது. எனவே, இதனை உணவின் மூலம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

* மூளையின் செயல்பாடு, நினைவாற்றல், புத்திசாலித்தனம் இவற்றை வளர்க்க ஒமேகா உதவும். மனச்சோர்வு, இதர மனநோய்களின் சிகிச்சைக்கும் பயன்படுகிறது.

* ஆரோக்கியமான மூளை வளர்ச்சி மற்றும் இயக்கம், இதய ரத்த நாள செயல்பாட்டுக்கும் ஒமேகா அவசியம். புற்றுநோய், மன அழுத்தம், நினைவுத்திறன் குறைபாடு, ஃபேட்டி லிவர் போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கவும், வந்த பின் அளிக்கப்படும் சிகிச்சையிலும் இதற்கு முக்கிய பங்கு உள்ளது.

* ஒமேகா 3, ஒமேகா 6, ஒமேகா 9 கொழுப்பு அமிலங்கள் நம் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன. உடல்நலத்தை பாதுக்காக்க ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு
அமிலங்களை கொண்ட எண்ணெய் மற்றும் இதர உணவுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

* ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் உணவில் ஒமேகா 6 கொழுப்பு அமிலமும் உணவில் 1:1 அல்லது 1:4 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.

* எண்ணெய் சத்துமிக்க மீன், வால்நட், ஃபிளாக்ஸ் சீட் எனப்படும் ஆளி விதை போன்றவற்றில் இருந்து போதுமான அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கிடைக்கிறது.

* அறிவு வளர்ச்சிக்கு ஒமேகா 3 மிகவும் நல்லது. மீன் எண்ணெயில் இருப்பது ஒமேகா 3-தான். மீனில் காணப்படும் இந்த ஒமேகா 3 எண்ணற்ற நல்ல விஷயங்களைக் கொண்டிருக்கிறது என்பதுதான் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.

* வளரும் குழந்தைகளின் உணவில் மீன் அடிக்கடி சேர்க்கும்போது அவர்களுடைய அறிவு விருத்தியடையும். கர்ப்ப காலத்தில் பெண்களிடம் மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் பட்டியலில் இந்த ஒமேகா 3-க்கு முக்கிய இடம் உண்டு.

* தாய்மைக் காலத்தில் இருக்கிற பெண்கள் மீனை தொடர்ந்து சாப்பிட்டால் ஒமேகா 3 குழந்தைகளுக்கு போய்ச் சேரும். அது அவர்களுடைய குழந்தைகளின் அறிவைக் கூர்மையாக்கும்.

* மீன் போன்ற கடல் உணவுகளில் இருந்து கிடைக்கும் இ.பி.ஏ மற்றும் டி.எச்.ஏ வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை நம்முடைய உடல் நேரடியாக பயன்படுத்திக் கொள்ளும்.

* நல்ல எண்ணெய் பசையுள்ள மீன்களில்தான் ஒமேகா 3 நமக்கு தாராளமாகக் கிடைக்கும். குறிப்பாக, சால்மன், நெத்தலி, கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற குளிர் நீர் எண்ணெய் மீன்களே EPA மற்றும் DHA ஆகியவற்றின் மிகவும் பரவலாகக் கிடைக்கும் மூலங்களாகும்.

* ஒமேகா -3 செறிந்த உணவுகளில் முதன்மையானவை மீன்கள். அதுவும் சால்மன், துனா, சார்டின், ஹெர்ரிங், மாக்கரல் வகை மீன்களில் அதிக அளவு ஒமேகா- 3 உள்ளது. இந்த வகை மீன்களை
(வறுக்காமல்) உண்டால் மாரடைப்பு வரும்
சாத்தியக்கூறு 44% குறைகிறது.

* பாதாம், வால்நட் போன்ற கொட்டைகளிலும், ஆலிவ், சோயா பீன்ஸ், பசுமையான இலைகளுள்ள காய்கறிகளிலும் ஒமேகா 3 உள்ளது.

* சணல் விதை எண்ணெய், வாதாம் கொட்டைகள், பசலைக் கீரை, பரங்கி விதைகள், சோயா பீன்ஸ், கோதுமை வித்து, கடுகு கீரை, இவைகளில் ஒமேகா 3 செறிந்துள்ளது. தினமும் 2 மேஜைக் கரண்டி பொடித்த சணல் விதைகளை சூப் அல்லது பருப்பு களுடன் கலந்து சாப்பிடுவது நல்லது.

* ஒமேகா நரம்புகளை வலிமைப்படுத்துகிறது. கண், மூளை செயல்பாடுகளுக்கு பயன்படுகிறது. பக்கவாதம் வருவதை தடுக்கிறது.

* ஒமேகா 3 ஒரு வலி நிவாரணியாக செயல்படுகிறது. உடலில் தேவையான அளவு ஒமேகா 3 இருந்தால் உடல் வலிகள் குறையும். உடலில் எரிச்சல், சிவப்பாவது, ரொம்ப சென்சிடிவ் ஆவது போன்ற பிரச்னைகள் தீரும்.

* ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் காக்கிறது. இதனால் இதய நோய்கள், மாரடைப்பு தவிர்க்கப்படுகின்றன. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்
படுத்துகிறது.

* மீனில் ஒமேகா 3 உள்ளதால் இதை சாப்பிடுட்வருவோருக்கு ஆஸ்துமா நோய் வராது. ஒமேகா 3 என்ற எண்ணெய் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தவிர்த்து, ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. பல வழிகளில் இதயத்தைப் பாதுகாக்கிறது.

* ஒமேகா 3 இதயத்துக்கு ரொம்பவும் நல்லது. கெட்ட கொழுப்பு இதயத்தை சேதப்படுத்தி சட்டென மாரடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தும். ஆனால், நல்ல கொழுப்பு உடலுக்குத் மிகவும் தேவை. ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது.

* ஒமேகா வலிப்பு, மாரடைப்பு இந்த இரண்டு நோய்களிருந்தும் மக்களைக் காப்பாற்றுகிறது. பொதுவாக மூளையில் ரத்த கட்டி இருந்தால் வலிப்பு வரும். அதுவே ரத்தக் குழாயில் இருந்தால் இதய அடைப்பு ஏற்படும். ஆகவே, இந்த நோய்களுக்குமே காரணமாக இருப்பது இந்த ரத்தக்கட்டிதான். இந்த அடைப்பை உடைக்கும் சக்தி ஒமேகா 3-க்கு உண்டு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்!!(வீடியோ)
Next post ஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா?? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-19)