மறையும் குரோமோசோம்கள்… அழிவில் ஆண் இனம்…!!(மருத்துவம்)

Read Time:8 Minute, 35 Second

வலுவாகவும், உறுதியுடனும் உள்ள Y குரோமோசோம்கள்தான் ஆண்மையைத் தீர்மானிக்கிறது. அதாவது உயிரினங்கள் அனைத்தும் செல் எனப்படும் நுண்ணிய பகுதியால் ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செல்லினுள்ளும் 46 குரோமோசோம்கள் உள்ளன. இந்த குரோமோசோமிற்குள் மனித வம்ச பரம்பரைச் செய்திகளை உள்ளடக்கிய வலை போன்ற நுண்ணிய துணுக்குகளான நியூக்ளிக் அமிலங்கள் அதாவது டி.என்.ஏ (DNA) உள்ளன.

பெண்களுக்கு XX குரோமோசோம்கள் ஜோடியாகவும், ஆண்களுக்கு XY குரோமோசோம்களும் இருக்கும். Y குரோமோசோமில் உள்ள Switch Gene என்று சொல்லப்படும் SRY அணுக்களில் இருக்கும் குரோமோசோம் ஜோடிகளில் 22 ஜோடி உடல் செல்களைத் தீர்மானிப்பவையாகவும், 23-வது ஜோடி பாலினத்தைத் தீர்மானிக்கிறது.

தற்போது பிரச்னை என்னவென்றால் XX பெண் குரோமோசோம்களில் எந்த மாறுபாடும் இல்லாமல் இயல்பான அளவிலும், எண்ணிக்கையிலும் இருக்கிறது. ஆனால், ஆண் கருவைத் தீர்மானிக்கும் Y குரோமோசோம்களின் எண்ணிக்கை குறைந்துவருவதோடு, வடிவத்திலும் சுருங்கிக்கொண்டே வருகிறது.

இந்நிலையில், இந்த Y குரோமோசோம்கள் தொடர்ந்து மறைந்து வந்தால், இன்னும் 4.6 மில்லியன் ஆண்டுகளில் Y குரோமோசோம்கள் மறைந்துவிடும் என்று யூகித்துள்ளார்கள். இந்த ஆண்டுகள் மிக அதிகமாகத் தெரியலாம். ஆனால், பூமியில் உயிர்கள் தோன்றி 3.5 பில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனோடு ஒப்பிடும்போது Y குரோமோசோம்கள் மறைவதற்கான காலம் என்பது மிகக்குறைவுதான் என்கிறார்கள் சமீபத்தில் டேனிஷ் ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள். PLOS Genetics- ல் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால், ஆண் பாலினமே அழியும் சூழ்நிலை உருவாகுமோ என்று சில சந்தேகங்கள் ஆய்வாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆனால், உடலில் இருக்கும் மற்ற குரோமோசோம்கள் அந்த இடத்தை பூர்த்திசெய்யக்கூடும் என்றும் சில ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இன்னொருபுறம், செயற்கை கருத்தரிப்பு மூலம் மட்டுமே இனப்பெருக்கம் நடைபெறும் சூழல் உருவாகும் என்றும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண் பாலின உயிர்களை மட்டுமே வைத்து கருவுறச்செய்யும் பணி நடைபெறக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

Y குரோமோசோம் அழிவதால் ஆண் இனம் மட்டும் அழியாது. ஆண், பெண் சேர்க்கையில் இனப்பெருக்கத்திற்கும் Y குரோமோசோம் அவசியம் என்றும், மேலும் இந்த Y குரோமோசோம்கள் குறைந்து வருவதால் பெண்களைவிட ஆண்களின் ஆயுளும் குறைந்து வருவதாகவும் சொல்கிறார்கள். 1600 ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ரத்தமாதிரி சோதனையில், ரத்தத்தில் உள்ள வெள்ளைஅணுக்களில் Y குரோமோசோம் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆணிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஆணின் ஆயுளும் குறைந்து வருவதாகவும்
தெரிவிக்கிறார்கள்.

செயற்கை கருத்தரிப்பு சிறப்பு மருத்துவர் கிருத்திகாதேவியிடம் இந்த ஆராய்ச்சி பற்றிக் கேட்டோம்…

‘‘உயிரணுக்கள் மண்டலத்தில் Y குரோமோசோம்கள் அழிந்தால் விந்தணு உற்பத்தியில் கண்டிப்பாக பிரச்னை ஏற்படும். இவர்களுக்கு Hybrid முறையில் விந்தணுக்களை செலுத்தி சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும். சிலருக்கு இயற்கையான முறையில் விந்தணுக்கள் வெளிவருவதில் தடை இருக்கலாம். அவர்களுக்கு விந்தணுப்பையிலிருந்து விந்தணுக்களை எடுத்து பெண்ணின் சினைமுட்டையில் செலுத்தலாம்.

பொதுவாக Y குரோமோசோம்கள் குறைவாக இருக்கும் ஆணிடமிருந்து அவர் வழியாக அவருக்குப் பிறக்கும் ஆண் வாரிசுக்கும் இந்த குறைபாடு தொடர்கிறது. செயற்கை கருத்தரிப்பு முறையிலும், இந்த அழியும் தன்மை உள்ள Y குரோமோசோம்களை சோதிக்காமல் தவறுதலாக சினைமுட்டையில் செலுத்திவிட்டால் கூட அதன்மூலம் பிறக்கும் ஆண்குழந்தைக்கும் பிரச்னை தொடரும்.

பரம்பரையாக தாத்தாவிடமிருந்து அப்பாவுக்கும் பிறகு பேரனுக்கும் இந்த குறைபாடுள்ள Y குரோமோசோம்கள் கடத்தப்படும்போது அந்த தலைமுறையில் வரும் அனைத்து ஆண்களுக்குமே மலட்டுத்தன்மை ஏற்பட்டு, IVF முறையில்தான் வாரிசை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். சாதாரண ரத்தப்பரிசோதனை மூலம் இந்த அழியக்கூடிய Y குரோமோசோம்களை கண்டறிய முடியாது.

இதற்கென பிரத்யேகமாக இருக்கும் PPR Analysis மூலம்தான் கண்டறிய வேண்டும்’’ என்றவரிடம் Y குரோமோசோம்களை அழிக்கும் காரணிகள் எவை என்று கேட்டோம்.‘‘பொதுவாக அணுஉலை, ரசாயன ஆலைகள் போன்ற மாசடைந்த சுற்றுச்சூழலில் பணி செய்யும் ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயை உண்டாக்கக்கூடிய புகை சூழ்ந்த நகரப் பகுதிகளில் வசிக்கும் ஆண்கள் மற்றும் புகை பிடிக்கும் ஆண்களுக்கும் இந்தக் குறைபாடு உண்டாகிறது. வெரிகோஸ் வெயின் என சொல்லப்படும் கால்களில் நரம்பு சுருண்டு கொள்ளும் நோய்உள்ளவர்களுக்கு ரத்தநாளங்கள் பாதிப்பதால் விந்தணு உற்பத்தியை குறைக்கிறது.

பாலினத்தைத் தீர்மானிக்கும் Y குரோமோசோம்களில் long arm மற்றும் short arm என பகுதிகள் உள்ளன. இதில் short arm பகுதிதான் ஆண் ஹார்மோன்களை உற்பத்தி செய்யக்கூடிய பகுதி. அதாவது பாலினத்தை நிர்ணயம் செய்யும் பகுதி. இந்த பகுதி குறைந்தால் அந்த ஆணிடம் பெண்தன்மை அதிகரிக்கும்.

அதுவே long arm பகுதி குறைந்தால் பார்ப்பதற்கு ஆணாக இருந்தாலும் மலட்டுத்தன்மை ஏற்படும்’’ என்கிற கிருத்திகா தேவி இதற்கான தீர்வையும் சொல்கிறார். ‘‘நவீன மருத்துவத்தில் எத்தனையோ மாற்றங்கள் வந்துவிட்டன. 70 சதவீதம் குறைபாடுள்ளவர்களுக்கு செயற்கைமுறையில் விந்தணுக்கள் அதிகரிக்கும் சிகிச்சையில் நிச்சயமாக சரி செய்துவிட முடியும்’’ என்ற நம்பிக்கை அளிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரியாவின் போர் விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு!!(உலக செய்தி)
Next post உலகமகா நடிப்புடா சாமி அடேங்கப்பா செம்ம காமெடி !( வீடியோ)