அமெரிக்காவின் பொருளாதாரத்தில் திடீர் வளர்ச்சி!!

Read Time:3 Minute, 22 Second

நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி 4.1% அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி பொறுத்தே அமைகின்றது. சமீப காலமாக அமெரிக்க நாட்டின் பொருளாதாரம் சற்றே சரியத் தொடங்கியதாக கூறப்பட்டது. அதே நேரத்தில் அமெரிக்கா ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது.

அதைத் தொடர்ந்து ஈரானுக்கு பொருளாதாரத் தடைகள் விதித்தது. மேலும் இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளை ஈரானுடன் வர்த்தகம் செய்யக்கூடாது என மிரட்டியது. இதனால் இந்நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகம் குறைய ஆரம்பித்துள்ளது.

மேலும் சீனாவுடனான வர்த்தக போரில் அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரியை அமெரிக்கா உயர்த்தியது. அதனால் சீனாவுடனான அமெரிக்க வர்த்தகம் முழுவதுமாக நின்று போகும் நிலை உண்டாகி இருக்கிறது.

இவைகளால் ஏற்பட்ட பொருளாதார தொய்வுகளுக்கு இடையே தற்போது சற்றே அமெரிக்காவுக்கு தெம்பூட்டும் செய்தி ஒன்றை அமெரிக்க வர்த்தகத் துறை அறிவித்துள்ளது.

அதன்படி அமெரிக்க உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சென்ற காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 4.1 % அதிகரித்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தி, சரக்கு மற்றும் சேவைப் பணிகள் மூலம் இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப்பிறகு அதிக அளவிலான வளர்ச்சி இதில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, தாம் ஆட்சிக்கு வந்தால் பொருளாதார வளர்ச்சி இரட்டிப்பாக்கப்பட்டு நான்கு சதவீதத்திற்கு மேல் அடைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் இம்முறை வளர்ச்சி வீதம் அதிகரித்ததை அடுத்து, அதனை ‘அற்புதம்’ என்று விவரித்த டிரம்ப், தன் கொள்கைகள் நன்றாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த வளர்ச்சியில் சறுக்கல் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படுக்கையில் நீடித்த இன்பம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?(அவ்வப்போது கிளாமர்)
Next post கருச்சிதைவின் காரணம் !!(மருத்துவம்)