திகைப்பூட்டும் அழகு… வியப்பூட்டும் ஒர்க் அவுட் !(மருத்துவம்)

Read Time:4 Minute, 24 Second

பாலிவுட்டில் ஸ்லிம் பியூட்டியாக வலம்வருகிற தீபிகா படுகோனே ஃபிட்னஸ் விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். தன்னுடைய உணவுமுறைகள், உடற்பயிற்சிகள் பற்றிய தகவல்களை அவ்வப்போது ரசிகர்களுடன் ஊடகங்களில் பகிர்ந்துகொள்வது வழக்கம். அந்தவகையில் தலைகீழாக நிற்கும் படம் ஒன்றை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு சமீபத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

தீபிகாவின் இந்தப்படம் தங்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்கான ஆர்வத்தைத் தூண்டும் உந்துதலாக இருந்ததாக பலரும் கூறியதால் கிட்டத்தட்ட 7 லட்சம் லைக்குகளை அள்ளி இணையதளத்தில் வைரலாகவும் ஆனது. நீண்ட நெடிய கால்கள், தட்டையான வயிறு என திகைப்பூட்டும் அழகோடு, பார்க்க ஒரு விளையாட்டு வீராங்கனை போன்ற தோற்றத்தில் இருக்கும் தீபிகா படுகோனே, இத்தகைய தோற்றத்தை சாதாரணமாகப் பெற்றுவிடவில்லை.

தீபிகாவின் பயிற்சியாளரான யாஸ்மின் கராச்சிவாலா தீபிகாவை ‘பில்லட்ஸ் ஸ்டார்’ என்று செல்லமாக அழைக்கிறார். பிரத்யேகமாக ‘பத்மாவத்’ படத்திற்காகவே தீபிகாவிற்கு, பில்லட்ஸ் பயிற்சிகளை கற்றுக் கொடுத்திருக்கிறார். உடற்பயிற்சிக்காக பெரும்பாலான நேரத்தையும், தனக்கு பிடித்த பல உணவுகளையும் தியாகம் செய்பவர் என்றும் பெருமையோடுவர்ணிக்கிறார்.

எப்போதும் ஒரே மாதிரியான பயிற்சிகள் மேற்கொள்வது தீபிகாவுக்கு பிடிக்காதாம். கார்டியோ பயிற்சிகள், பளுதூக்கும் பயிற்சிகள், யோகா, பில்லட்ஸ் மற்றும் ஸ்ட்ரெச்சிங் போன்ற கலவையான பயிற்சிகளே தீபிகாவின் ஃபிட்னஸ் மந்திரம். பேட்மின்டன் வீரரின் மகளான இவருக்கு பேட்மின்டன் விளையாடுவதும், நடனங்கள் ஆடுவதும் பிடித்தமான விஷயங்கள்.

யோகா மீது அலாதியான பிரியம் கொண்ட தீபிகாவின் உடற்பயிற்சி திட்டத்தில் அனைத்து வகையான யோகா பயிற்சிகளும் இருக்கும். தினமும் சூரிய நமஸ்காரம், பிராணாயாமம் செய்பவர். பரதநாட்டியம், கதக், ஜாஸ் என பலவகையான நடனங்களை கற்று வைத்திருப்பதால் ஜிம் செல்ல முடியாதபோது நடனமாடத் தொடங்கிவிடுவார். பளுதூக்கும் பயிற்சிகளில் ஃப்ரீ ஹேண்ட் வெயிட்டுகளை அதிகம் செய்பவர்.

பயிற்சியாளர் சொல்லித்தரும் சரியான உத்திகளை பின்பற்றுவதாலேயே உடலை மாயமாக வைத்துக் கொண்டிருக்கிறார். இவை தவிர, எந்த உபகரணங்களும் இல்லாது செய்யும் பில்லட்ஸ், ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை செய்து உடலின் நெகிழ்வுத் தன்மையையும் பராமரிக்கிறார். கொழுப்பு தசைகள் அதிகம் தங்கும் இடங்களான வயிறு, தொடை, கை போன்றவற்றுக்கு முக்கியம் தரும் ஆப்ஸ் பயிற்சிகளையும் தினந்தோறும் செய்கிறார்.

ஸ்ட்ரென்த் டிரெயினிங், பவர் லிஃப்ட்ஸ், பாக்ஸ் ஜம்ப்ஸ், பெஞ்ச் ஹாப் ஓவர்ஸ், ஸ்குவாட் ஜாக்ஸ், பவர் பேக் ஸ்ட்ரென்த், 200 பவுண்ட் லெக் ப்ரஸ்ஸஸ் என தீபிகா படுகோனேவின் உடற்பயிற்சி அட்டவணைகள் நீண்டுகொண்டே போகிறது.அவர் ஏன் ஸ்லிம் பியூட்டியாக இருக்கிறார் என்பது இப்போது புரிகிறதுதானே!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யோகா செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள்!!(மகளிர் பக்கம்)
Next post உச்சக்கட்டம் பற்றி ஓர் அறிமுகம்!!( அவ்வப்போது கிளாமர்)