பாதங்களை பாதுகாக்கும் பயிற்சிகள்!!(மருத்துவம்)

Read Time:2 Minute, 42 Second

பாதங்களைப் பராமரிப்பது பற்றியும், அதன் முக்கியத்துவங்கள் பற்றியும் கடந்த இதழ்களில் படித்திருப்பீர்கள். பாதங்களைப் பாதுகாப்பதற்கென்று சில பிரத்யேகமான பயிற்சிகளும் இருக்கின்றன. அவற்றை இந்த இதழில் பார்ப்போம். பிசியோதெரபிஸ்ட் அல்லது மருத்துவ வல்லுநரின் ஆலோசனை பெற்று இந்த பயிற்சிகளை முறையாக மேற்கொள்ளும்போது முழுமையான பலன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Ankle Stretch

விரிப்பில் இரண்டு காலையும் நன்றாக நீட்டி உட்காரவும். இப்போது நீளமான டவல் அல்லது பெல்ட் எடுத்துக்கொண்டு இரண்டு நுனிகளையும் இரண்டு கைகளில் பி்டித்துக் கொள்ள வேண்டும். நடுப்பகுதி விரல்களுக்கு கீழ் மேல் பாதங்களில் இருக்க வேண்டும். மேல் பாதத்தை டவலால் உட்புறமாக இழுத்து 20 வினாடிகள் வைத்திருக்க வேண்டும். இப்போது டவலை தளர்த்தி பாதங்களை நேராக வைக்கவும். இதேபோல் 5 முறை செய்யலாம்.

Heel Raises

நுனிபாதத்தில் நின்று கொண்டு குதிகாலை உயர்த்தி சில நிமிடங்கள் நிற்கவும். பின்பு குதிகாலை இறக்கி வைக்கவும். இதை 20 முறை செய்ய வேண்டும்.

Heel drop Stretch

இப்போது படிக்கட்டின் நுனியில், நுனிகாலால் நின்று கொண்டு, மெதுவாக குதிகாலை கீழ்நோக்கி இறக்க வேண்டும். இதை மேலே சொன்ன குதிகால் உயர்த்தும் பயிற்சிக்கு நேர்மாறாக குதிகாலை இறக்கும் பயிற்சி. இப்பயிற்சியையும் 20 முறை செய்யலாம்.

Heel walking exercises

இப்பயிற்சிக்கு தட்டையான ஷூக்கள் அணிந்து கொள்ள வேண்டும். பாதங்களை உயர்த்தி, குதிகாலால் மெதுவாக சில நிமிடங்கள் நடக்கவும். அடுத்து குதிகாலை உயர்த்தி, முன்னங்கால் விரல்களால் இதேபோல் நடக்க வேண்டும். மேலே சொன்ன இந்த 4 பயிற்சிகளை செய்தாலே கணுக்காலில் சுளுக்கு, காயம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே வாரத்தில் முடி நீளமாக வளர முடி உதிர்வை நிறுத்த!!( வீடியோ)
Next post UPPER BODY WORKOUT!!(மருத்துவம்)