கத்தரிக்காயால் இத்தனை நன்மையா?(மருத்துவம்)

Read Time:8 Minute, 19 Second

கத்தரிக்காய் இல்லாமல் தென்னாட்டு சமையலே இருக்காது என்னும் வகையில் சாம்பார், பொரியல், மசியல் என்று பல உணவு வகைகளில் கத்தரிக்காய் தவறாமல் இடம் பெற்றிருக்கும். உணவாகப் பயன்படும் கத்தரிக்காயின் மருத்துவ குணங்களை மிக விரிவாக நம் முன்னோர்களும் சொல்லியுள்ளனர்.கத்தரிக்காய் வலியைப் போக்கும் தன்மையுடையது. காய்ச்சலைப் போக்கக்கூடியது. சோர்வைப் போக்கக் கூடியது. வீக்கத்தைத் தணிக்கக் கூடியது. கொழுப்பைக் குறைக்கக் கூடியது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. ரத்த வட்ட அணுக்கள் சேர்க்கையைத் தடுக்கக் கூடியது. கண்களின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது.

மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த வல்லது. ஒவ்வாமையால் ஏற்படும் மயக்க நிலையை தடுக்க வல்லது. உறுப்புகளைத் தூண்ட வல்லது. 100 கிராம் கத்தரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச்சத்து அடங்கி இருப்பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்ள உதவுவதோடு ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைக்கவும் இது மிகவும் உதவியாக உள்ளது.கத்தரிக்காயின் தோலில் உள்ள ‘ஆன்த்தோ ைசயனின்’ என்னும் வேதிப்பொருள் உடலின் சோர்வைப் போக்கிப் புத்துணர்வைத் தரக்கூடியது. அது மட்டுமின்றி ‘ஆன்த்தோ சையனின்’ புற்றுநோய் எனப்படும் கேன்சர் செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு தடுக்க வல்லது.கத்தரி இலைகள் ஆஸ்துமா எனப்படும் இறைப்பு நோய், மூச்சுக்குழல் நோய்கள், சுவாச அறைக் கோளாறுகள், வலியுடன் சிறுநீர் வெளியேறுதல் ஆகியவற்றுக்கும் மருந்தாகிப் பயன்தருகின்றது. வாயில் எச்சில் சுரக்கவும் இது பயன்படுகிறது. கத்தரிச்செடியின் வேர் மூச்சிறைப்பு மற்றும் மூக்கில் தோன்றும் புண்களுக்கு மருந்தாகிறது.

வேரின் சாறு காது வலியைப் போக்கப் பயன்படுகிறது. நோய்வாய்ப் பட்டிருக்கும்போது பத்திய உணவில் கத்தரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.இதில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவும் ஓர் உன்னதமான மருந்தாகும்.இதில் உள்ள நார்ச்சத்து பசியை அடக்கி வைப்பதால் உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. மேலும் இதயத்துக்கு பலத்தைத் தருவதாக அமைகிறது. கத்தரிக்காயை எண்ணெயில் இட்டுக் காய்ச்சி மேல் பூச்சாகப் பூசுவதால் ரத்தக்கசிவு குணமாகும்.

இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு மென்மையும், பலமும் தரவல்லது.நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கவல்லது மட்டுமின்றி சர்க்கரை நோயையும் தடுக்க வல்லது.கத்தரிக்காயைச் சாறு பிழிந்து உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தேய்த்துவிட கால்களில் வியர்த்து இடையூறு உண்டாவது தடுக்கப்படும்.கத்தரிக்காயை வேக வைத்து உண்பதால் காளான் சாப்பிட்டு ஏற்பட்ட நச்சு முறிந்துவிடும்.வேக வைத்து அத்துடன் போதிய பெருங்காயம், பூண்டு, உப்பு சேர்த்து சூப் செய்து சாப்பிட வயிற்றில் சேர்ந்து துன்பம் தரும் வாயு கலையும்.வேக வைத்து அத்துடன் போதிய தேன் சேர்த்து மாலை நேரத்தில் சாப்பிட நல்ல தூக்கத்தை உண்டாக்கும். இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை அகலும்.

நெருப்பில் சுட்டு வேக வைத்து போதிய சர்க்கரை சேர்த்து சாப்பிட மண்ணீரல் வீக்கத்தைக் குறைக்கும். காய்ச்சலால் ஏற்பட்ட மண்ணீரல் வீக்கம் குறிப்பாக அகலும். காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிடுவது மிக்க நலம் தரும்.அடிக்கடி உணவில் சேர்ப்பதால் இதயம் மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு தவிர்க்கப்படும்.அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் அதிலுள்ள குறைந்த அளவு நிகோட்டின் சத்து, புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு துணை செய்யும்.இதில் உள்ள வேதிப்பொருட்கள் உடலில் இரும்புச்சத்து உண்டாவதற்கும் அதனால் ரத்தத்தில் உள்ள முக்கிய பகுதியான ஹீமோகுளோபின் அதிகமாவதற்கும் உதவி செய்கிறது.

இதில் அடங்கியுள்ள நாசுமின் என்னும் வேதிப்பொருள் ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான இரும்புச்சத்தைக் குறைத்து வெளியேற்ற உதவுகிறது. இதனால் மாரடைப்பு தவிர்க்கப்படுகிறது. ரத்தத்தில் சேர்ந்துள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதால் இத்தகு பாதுகாப்பு இதயத்துக்கு ஏற்படுகிறது.செரிமானத்தை அதிகப்படுத்துவதாகவும் துரிதப்படுத்துவதாகவும் அமைகிறது.ஜீரண உறுப்புகளுக்கு பலம் தருவதாலும் மலத்தை வெளியேற்றுவதாலும் மலக்குடலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுப்பதாக அமைகிறது.நுண்கிருமிகளைத் தடுக்க வல்லதாகவும் தொற்று நோய்களைத் தவிர்க்க வல்லதாகவும் விளங்குகிறது. இதில் அடங்கியுள்ள விட்டமின் சி சத்து இதற்குத் துணையாகிறது.

இதில் அடங்கியுள்ள விட்டமின்கள், மினரல்கள், அமினோ ஆசிட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுவதோடு தோல் ஆரோக் கியத்துக்கும் இது துணை செய்கிறது. தோல் மென்மையும் பளபளப்பும் பெற உதவுகிறது. தோலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுத்து தோல் ஆரோக்கியமாயிருக்க உதவுகிறது.இதில் பொதிந்திருக்கும் ஆன்த்தோ சையனின் என்னும் வேதிப் பொருள் வயது முதிர்வைத் தடுத்து இளமைத் தோற்றத்துக்கு வகை செய்கிறது.கத்தரிக்காயை ஊசியினால் குத்தித் துளைகள் செய்து நல்லெண்ணெய் இட்டு வறுத்து பல்வலிக்குக் கொடுக்கலாம்.(சிலருக்கு கத்தரிக்காய் அலர்ஜியாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தகுந்த மருத்துவரிடம் ஆலோசித்து அதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தரங்கெட்ட அபிராமி பல ஆண்களுடன் அடித்த கூத்து – வீடியோ!!
Next post படுக்கை அறையில் நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்க என்ன செய்யலாம்? (அவ்வப்போது கிளாமர்)