சீன பொருட்களுக்கு கூடுதல் வரி!!(உலக செய்தி)

Read Time:3 Minute, 58 Second

உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அது வர்த்தக போராக மாறி உள்ளது.

சீனா தனது அறிவுசார் சொத்துக்களை திருடுவதாகவும், தொழில் நுட்பங்களை தன் நாட்டுக்கு மாற்றிக்கொண்டு வருவதாகவும் அமெரிக்கா முறைப்பாடு கூறுகிறது. சீனா தொடர்ந்து இந்தப் முறைப்பாட்டை மறுத்து வருகிறது.

ஆனாலும் கூட, சீனாவால் தங்களுக்கு ஏற்படுகிற வர்த்தக பற்றாக்குறையை சரிகட்டுவதற்கு, அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

தொடர்ந்து சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் உலகளவில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த மாதம் கூட, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா அதிரடியாக கூடுதல் வரி விதித்தது.

இந்த நிலையில், மேலும் 200 பில்லியன் டொலர் மதிப்பிலான சீனப்பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூடுதல் வரி விதிப்பு பட்டியலில் இணைய தொழில்நுட்ப தயாரிப்புகள், மின்னணு பொருட்கள், நுகர்வோர் பயன்பாட்டுப்பொருட்கள், சீன கடல் உணவுகள், மரச்சாமான்கள், விளக்குகள், டயர்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சைக்கிள்கள், கார் இருக்கைகள் இடம் பெறும் என தெரிய வந்து உள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் லிண்ட்சே வால்டர்ஸ் கூறும்போது, “சீனாவின் நேர்மையற்ற வர்த்தக நடவடிக்கைகளை ஈடுகட்டுவதற்கு தானும், தனது நிர்வாகமும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி டிரம்ப் தெளிவுபடுத்தி உள்ளார். அமெரிக்கா நீண்ட காலமாக எழுப்பி வருகிற பிரச்சினைகளை சீனா கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிட்டார்.

அமெரிக்க கருவூல அமைச்சர் ஸ்டீவன் மனுசின், சீனாவுடனான வர்த்தக பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும்கூட, சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு டிரம்ப் தன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.

மேலும் சீனாவின் 267 பில்லியன் டொலர் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் கடந்த 7 ஆம் திகதி எச்சரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி!!(மருத்துவம்)
Next post 50 சதவிகித மருத்துவர்களுக்கு இதய நோய்!!(மருத்துவம்)