பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய யுட்டு புயல்: 10,000 வீடுகள் சேதம்!!(உலக செய்தி)

Read Time:2 Minute, 12 Second

பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய கடும் புயல் காரணமாக, இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 10,000க்கும் மேற்பட்டவர்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன. நேற்று வடக்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் ‘யுட்டு’ என பெயரிடப்பட்டுள்ள வலுவான புயல் தாக்கியது. மணிக்கு 152 கி. மீ வேகத்தில் வீசிய காற்றினால், பெருமழையும் கொட்டித் தீர்த்தது. இந்த புயலால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் பிலிப்பைன்ஸ் தீவின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வட மாகாணங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டை மங்குட் என்ற புயல் கடுமையாக தாக்கியது குறிப்பிடத்தக்கது. மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் இந்த புயலால் பலர் உயிரிழந்துள்ளனர். மங்குட் புயலின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்த நிலையில், யுட்டு புயலால் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். உலகின் மிகவும் பேரழிவு ஏற்படக்கூடிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 சூறாவளியாலும், புயல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எங்க அப்பா DGP, உனக்கு வேலை வேணுமா? வேண்டாமா? என போலிசை மிரட்டிய பெண்!!(வீடியோ)
Next post நான் ஜெயித்துக் கொண்டிருக்கிறேன்!!(மகளிர் பக்கம்)