ஐ.அமெரிக்காவின் விண்வெளிப்படை!!(கட்டுரை)

Read Time:8 Minute, 9 Second

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐ.அமெரிக்க விண்வெளிப் படையை நிறுவ வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அவர் அது பற்றி தெரிவிக்கையில் ரஷ்யாவும் சீனாவும் இப்பகுதியில் முன்னோடிகளாக இருப்பதாகவும், அதற்கு இணையாக ஐ.அமெரிக்காவும் விண்வெளிப் படையை நிறுவ வேண்டிய அவசியத்தில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி, 2020ஆம் ஆண்டுக்குள் இராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோரப் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில், புதிய இராணுவப் பிரிவானது விண்வெளியில் இராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்படும் எனவும், அது ஐ.அமெரிக்க விண்வெளிப் படை என அழைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். ஐ.அமெரிக்க ஜனாதிபதியின் குறித்த கருத்தானது, வொஷிங்டனின் முக்கிய இலக்கு, அதன் பாரம்பரிய போட்டியாளர்களுடன் போட்டியிடுவதில் பின்தங்கியிருக்காது என்பதை நிரூபிப்பதாகவே அமைகிறது.

1947இல் தேசிய பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து, இராணுவத்தின் புதியதொரு கிளையாக, ஐ.அமெரிக்க விண்வெளிப்படை, ஐ.அமெரிக்காவின் பாதுகாப்பு ஆயுதப்படைகளில் முதற்தடவையாக இணைக்கப்பட்ட நிகழ்வாகும். கொலராடோவின் பீற்றர்சன் விமானப்படைத் தளத்தை அதன் தலைமையகமாகக் கொண்டுள்ள ஐ.அமெரிக்க விமானப் படைகளின் முக்கியதொரு பிரிவாக விண்வெளிப்படை அமைவதுடன், இது உலகளாவிய ரீதியில் ஐ.அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை பல்வேறு செயற்கைக்கோள், இணையக் குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்படி, உலகெங்கிலும் உள்ள 88 இடங்களில் சுமார் 47,000 பேர், குறித்த பாதுகாப்புப் பிரிவில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

பனிப்போர் காலத்தைப் பொறுத்தவரை, ​​ஐ.அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும், விண்வெளியில் சண்டையிடவில்லை, ஆனால், தமது பாதுகாப்பு, யுத்த நடவடிக்கைகளுக்காக உளவுச் செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தியிருந்தன. அந்த நேரத்தில், வொஷிங்டன், பசிபிக் பெருங்கடலில் செயற்கைக்கோள் ஏவுகணை ஒன்றை நிறுத்தியிருந்தமையும், மொஸ்கோ, செயற்கை கோள் பாதையை அழிக்கக்கூடிய ஏவுகணை ஆயுதமொன்றையும் உருவாக்கியிருந்தது. பாதுகாப்பான உலக அமைப்பின் (SWF) கூற்றுப்படி, சீனா, ரஷ்யா, ஐ.அமெரிக்கா ஆகியவை, செயற்கைக்கோள்களை அழிக்கக்கூடிய தொழில்நுட்பத்தை ஏற்கனவே கொண்டுள்ளன. இந்த ஆயுதங்கள், ஏவுகணைகள் மூலம் பூமியில் இருந்து நேரடியாக ஒரு செயற்கைக்கோளை நோக்கிச் அனுப்பி – ஏவுகணை பிரிக்கப்பட்ட பிறகு, குறித்த ஆயுதமானது, செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் தன்னை நிலைநிறுத்தி, அதன் படி இலக்குவைக்கப்பட்ட செயற்கைக்கோளுடன் மோதி, அதனை அழிக்க வல்லதாகவே உருவாக்கப்பட்டிருந்தது. இவற்றின் மத்தியிலேயே வெளிப்படையாகவே, 2007ஆம் ஆண்டில், பூமியின் 800 கிலோமீற்றர் நீளமுள்ள ஒரு விண்கலத்தை அழிப்பதற்கு, சீனா செயற்கைக்கோள் எதிர்ப்பு றொக்கெட் ஒன்றைப் பரீட்சித்ததுடன், அதில் வெற்றியும் கண்டிருந்தது.

மேலும், இதற்கிடையில், வொஷிங்டன், ஐ.அமெரிக்க விண்வெளி அமைப்புகளைத் தகர்க்க வடிவமைக்கப்பட்டுள்ள லேசர் வான்வழி அமைப்பை ரஷ்யா உருவாக்கி வருவதாகக் கூறியுள்ளது. ஐ.அமெரிக்க செயற்கைக்கோள்களை அழிக்கவே, போர் விமானங்களில் இருந்து தொடங்கப்படக்கூடிய ஏவுகணைகளை மொஸ்கோ உருவாக்கி வருவதாக, பென்டகன் தொடர்ச்சியாகக் கூறுகின்றது. குறித்த இவ்விடயமானது, ஐ.அமெரிக்க பாதுகாப்பு மட்டத்தில் தமது விண்வெளி தொடர்பான பாதுகாப்பைப் பலப்படுத்தவேண்டிய நிலை தொடர்பாக, ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஆயினும் மறுபுறத்தில், 2008இல் ரஷ்யாவுடனும் சீனாவுடனும் இணைந்து, விண்வெளியில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க சர்வதேச உடன்படிக்கை ஒன்றை முன்வைத்தது என்ற போதிலும், இந்த நாள் வரை, ஐ.அமெரிக்க பல்வேறு சாக்குகளைச் செய்துள்ளதுடன், ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. மேலும், 2014இல் ரஷ்யா, ஐ.நா பொதுச் சபைக்கு முன்பாக விண்வெளியில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க, மற்றொரு வரைவுத் தீர்மானத்தை முன்வைத்த போதிலும், ஐ.அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், அத்தீர்மானத்தை மீண்டும் ஏற்கவில்லை.

இவை, புதியதொரு போர்க்களமாக விண்வெளியை ட்ரம்ப் நிர்வாகம் வரையறுத்துள்ளமையையே காட்டுகின்றது. உப ஜனாதிபதி மைக் பென்ஸ், தனது பென்டகன் உரையில் “சமாதானம் மட்டுமே, சமாதானத்தால் வருகிறது என்பதை, வரலாறு நிரூபிக்கிறது. அடுத்து வரும் தலைமுறை ஐ.அமெரிக்கர்கள், வரம்புக்குட்பட்ட விரிவாக்கத்தில் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, ஐ.அமெரிக்காவின் சீருடை அணிவகுத்து நிற்க வேண்டும். இதன்படி ஐ.அமெரிக்கா தனது விண்வெளிப் படைகளைப் பலப்படுத்த வேண்டும்” என்று கூறினார். இக்கூற்றானது, விண்வெளி ஆயுதப் படை ஒன்றை உருவாக்க ஐ.அமெரிக்கா எவ்வாறு தலைப்படுவதைக் காட்டுகின்றது.

மறுபுறத்தில், ரஷ்யா, சீனா, ஐ.அமெரிக்கா தவிர்த்து, இந்தியா, ஈரான், ஜப்பான் போன்ற பல நாடுகளும் விண்வெளியில் செயற்பட்டு வருகின்றன. சந்தேகமில்லாமல் அவர்கள் தங்கள் எதிரிகளுக்கு எதிராக, தங்களுடைய பாதுகாப்புப் பற்றியே சிந்திக்கின்ற இந்நிலை, ஆயுதப் போட்டியொன்றையும், புதிய ஆயுதச் சந்தைகளையும் தூண்டிவிடும் என்பதே அச்சப்படவேண்டிய ஒன்றாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை!!(அவ்வப்போது கிளாமர்)
Next post குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய நடிகைக்கு அபராதம் !!(சினிமா செய்தி)