ஆரம்பித்த போர் – பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு !!

Read Time:1 Minute, 15 Second

ஏமனின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றும், செங்கடல் துறைமுக நகருமான ஹொதய்தா கடந்த 4 ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கிறது. இந்த நகரை அவர்களிடம் இருந்து மீட்டெடுக்க ஜனாதிபதி ஆதரவு படையினர் கடந்த ஒரு வார காலமாக அங்கு கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.

இரு தரப்புக்குமான இந்த போரில் அப்பாவி மக்களும் சிக்கி பலியாகி வருகின்றனர். இதில் 24 மணி நேரத்தில் மட்டும் 43 கிளர்ச்சியாளர்களும், ஜனாதிபதி ஆதரவு படையினர் 9 பேரும் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

அங்கு தொடர்ந்து சண்டை நீடித்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை 149 ஆக உயர்ந்து உள்ளது. கடைசியாக கிடைத்த தகவலின்படி 110 கிளர்ச்சியாளர்கள், ஜனாதிபதி ஆதரவு படையினர் 32 பேர் மற்றும் அப்பாவி மக்கள் 7 பேர் என 149 பேர் இந்த போரில் பலியானதாக தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விலைபேசும் காலம்!!(கட்டுரை)
Next post கனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்!!(வீடியோ)