தாய்லாந்தில் ராணுவ ஆட்சி மந்திரிகள் 2 பேர் கைது: பிரதமரை பிடிக்க தீவிரம்
தாய்லாந்தில் பிரதமர் தக்ஷின் ஷினோவத்ராவுக்கு எதிராக ராணுவம் புரட்சி நடத்தி ஆட்சியை பிடித்தது. தளபதி பூன்யரஷ்லின் தன்னை பிரதமராக அறிவித்துக் கொண்டார். அங்கு ராணுவ சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளின் பொது கூட்டங்கள், பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே துணை பிரதமர் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை ராணுவம் கைது செய்துள்ளது. இப்போது தக்ஷின் ஷினோ வத்ரா மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த 2 மந்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றுள்ள ரக்ஷின் இன்னும் நாடு திரும்பவில்லை. அவரை கைது செய்ய ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. அவர் இப்போது லண்டனில் தங்கி இருக்கிறார். லண்டனில் இருந்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தாய்லாந்தில் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும். என்று கூறியுள்ளார். அவர் எப்போது நாடு திரும்புவார் என்பதை அறிவிக்கவில்லை.
இன்னும் 2 வாரத்தில் இடைகால பிரதமர் ஒருவரை நியமிக்கப்போவதாக ராணுவ தளபதி தெரிவித்து இருக்கிறார். தாய்லாந்து மன்னர் பூமி பால் அதுல்யராஜ் ராணுவ தளபதிக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.