அழகே..அழகே.!!(மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 4 Second

* கசகசா ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீருடன் கலந்து அரைத்து முகத்தில் பூசிக் கொண்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.
* புதினா சாறு, எலுமிச்சைச்சாறு இரண்டையும் வெந்நீரில் கலந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை முகத்தில் ஆவி பிடித்தால் அழுக்குகள் அகன்று சுத்தமாகவும் வசீகரமாகவும் இருக்கும்.

* முகத்திற்கு மேக்கப் போடுவதாக இருந்தால் ஒரு துண்டு ஐஸ் எடுத்து முகம் முழுவதும் தேய்த்துக் கொண்டு காய்ந்ததும் மேக்கப் போட்டுக் கொண்டால் நீண்ட நேரம் வரை அழியாமல் கலையாமல் இருக்கும்.
* ஆரஞ்சு அல்லது எலுமிச்சம் பழத்தோலை வெயிலில் காயவைத்துப் பொடித்து அதனுடன் கடலை மாவு, பால், தண்ணீர் சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்தவுடன் கழுவிக் கொண்டால் முகத்திலுள்ள சுருக்கங்கள் நீங்கும்.
* முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மறைய ஒரு ஸ்பூன் தயிருடன் தக்காளிப் பழத்தைச் சேர்த்துக் குழைத்து தடவிக் கொண்டு நன்குறியதும் கழுவிக் கொண்டால் போதும்.
* தேங்காய் எண்ணெய், தேங்காய்ப் பால் சம அளவு எடுத்து, இரண்டு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் கலந்து காய்ச்சி வடிகட்டி தினந்தோறும் முகம், கை, கால்கள், உடம்பில் தடவி அரைமணி நேரம் கழித்து பாசிப்பயறு மாவினால் தேய்த்துக் குளித்தால் உடல் நல்ல நிறமாகி மின்னும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்டாய உடலுறவு!!(அவ்வப்போது கிளாமர்)
Next post உலகின் ஆபத்தான 10 துப்பாக்கிகள்-!!(வீடியோ)