17 வயது சிறுவனை சுட்ட பொலிஸார் மூவருக்கு 40 ஆண்டு சிறை!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 12 Second

ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில் பிற நாடுகளை காட்டிலும் அதிக அளவில் போதை பொருள் புழங்குகிறது. எனவே போதைப் பொருளை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஜனாதிபதி ரோட்ரிகோ துதர்தே கடுமையான போக்கை கையாண்டு வருகிறார்.

அந்த வகையில் போதை பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என சந்தேகிக்கும் நபர்களை பார்த்த இடத்தில் சுட்டு கொல்லும் அதிகாரத்தை பொலிஸாருக்கு அவர் வழங்கி உள்ளார்.

அதன்படி 2016 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை சுமார் 5000 பேர் பொலிஸாரின் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டு இருக்கிறார்.

ஆனால் இது முற்றிலும் மனித நேயமற்ற செயல் என்றும் அப்பாவி மக்கள் மீது தொடுக்கப்படும் போர் என்றும் மனித உரிமை அமைப்புகள் சாடின. ஜனாதிபதி ரோட்ரி கோ துதர்தே மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கிடையில், கடந்த 2017 ஆம் ஆண்டு போதை பொருள் விவகாரத்தில் கியான் டெலோஸ் சாண்டோஸ் என்கிற 17 வயது சிறுவனை பொலிஸார் சுட்டுக்கொன்றனர். இது அங்கு பெரிய அளவிலான போராட்டத்துக்கு வித்திட்டது.

அதன் எதிரொலியாக சிறுவனை சுட்டுக்கொன்ற 3 பொலிஸார் மீது நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் 3 பேரின் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டது.

இதை அடுத்து, குற்றவாளிகள் 3 பேருக்கும் தலா 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபத்தில் சிக்கும் பெண்களை காப்பாற்றும் செயின் அறிமுகம் !!(உலக செய்தி)
Next post கவலையை மறந்து இதை கொஞ்சம் ரசியுங்கள்!!(வீடியோ)