பின்லேடனைப் பிடிக்க பாகிஸ்தானுக்கு துருப்புகளை அனுப்பவும் தயங்க மாட்டோம் -அதிபர் புஷ் மிரட்டல்

Read Time:2 Minute, 27 Second

usa-bush.jpgபின்லேடனைப் பிடித்து நீதிக்குமுன் நிறுத்துவோம். அதற்காக பாகிஸ்தானுக்குள் துருப்புகளை அனுப்பவும் தயங்கமாட்டோம் என்று அமெரிக்க அதிபர் புஷ் பாகிஸ்தானுக்கு மரட்டல் விடுத்துள்ளார். புஷ் நேற்று வாஷிங்டனில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பயங்கரவாதி பின்லேடனைப் பிடிக்க பாகிஸ்தானுக்குள் தேடுதல்வேட்டை நடத்துவோம். பின்லேடன் குறித்த சரியான உளவுத்தகவல் கிடைத்தால், துருப்புகளை பாகிஸ்தானுக்குள் அனுப்பவும் தயங்கமாட்டோம்.

பின்லேடனைப் பிடித்து நீதிக்குமுன் நிறுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். மேலும் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் அல்கொய்தா இயக்கத்தினர் அனைவரையும் பிடித்து நீதிக்குமுன் நிறுத்தவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும் கூறியுள்ளார்

அமெரிக்க அதிபர் புஷ்ஷின் பேட்டி குறித்து பின்னர் நிருபர்களைச் சந்தித்த முஷாரப் கூறியதாவது: தமது நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனைகளை சமாளிக்க தமக்கு அமெரிக்கா கற்றுக்கொடுக்கத் தேவையில்லை. நாட்டின் இறையான்மையைப் பாதுகாக்க போதுமான பலம் எங்களிடம் உள்ளது. அல்கொய்தா மற்றும் தலிபான் இயக்கத்தின் நடவடிக்கைகளை முழபலத்தையும் கொண்டு முறியடித்துள்ளோம். இனியும் அவர்களை கண்டறிந்து முறியடிக்கும் பலம் எங்களுக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் புஷ்சும் பாகிஸ்தான் அதிபர் முஷ்ரபும் இன்று வெள்ளைமாளிகைமயில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஈஎன்டிஎல்எப்பின் நரித்தனமான தில்லுமுல்லும் திருகுதாளமும்…
Next post ஜெர்மனியில் அதிவேக பறக்கும் ரெயில் கவிழ்ந்து 19 பேர் பலி