சன்பீஸ்ட் ஓப்பன் டென்னிஸ்: ஹிங்கிஸ்- சானியா அரை இறுதியில் மோதல்

Read Time:1 Minute, 2 Second

Tennis(Hingis-Saniya).jpgமுன்னணி வீராங்கணைகள் பங்கேற்ற சன்பீஸ்ட் ஓப்பன் டென்னிஸ் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் நிலை வீராங்கனையான மார்ட்டினா ஹிங்கிஸ்(சுவிட்சர்லாந்து) கால் இறுதியில் 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் தாமரைனை(தாய்லாந்து) தோற்கடித்தார்.

மற்றொரு கால் இறுதியில் இந்திய வீராங்கனை சானியாமிர்ஷா 6-4, 7-5 என்ற கணக்கில் பிரான்சை சேர்ந்த நெசாயை தோற்கடித்தார். அரை இறுதியில் ஹிங்கிஸ்- சானியா மோதுகிறார்கள். மற்றொரு அரைஇறுதியில் ஒல்சா பவுச்கோவா (ரஷியா)- இரோடா துல்யாக்னோவா (உஸ்பெகிஸ்தான்) மோதுகிறார்கள்.

Tennis(Hingis-Saniya).jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஜெர்மனியில் அதிவேக பறக்கும் ரெயில் கவிழ்ந்து 19 பேர் பலி
Next post தாய்லாந்தில் ராணுவ ஆட்சிக்கு மன்னர் ஒப்புதல் அளித்தார்