இசையமைப்பாளருடன் நெருக்கம் – காதல் வலையில் பிரபலம்! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 48 Second

பிரேமம் என்கிற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மடோனா செபாஸ்டின், தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் படத்தில் நடித்தார். தொடர்ந்து கவண், பவர் பாண்டி, ஜுங்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த மடோனா தற்போது, சசிகுமார் ஜோடியாக கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் நடித்து வருகிறார்.

படங்களை தேர்வு செய்வது குறித்து அவர் கூறும்போது, ‘‘நான் கதைகள் தேர்வில் கவனமாக இருக்கிறேன். எந்த வகையான படங்களை தேர்வு செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும் விரும்புகிறேன்’’ என்றார்.

இந்தநிலையில் இசையமைப்பாளர் ராபி ஆபிரகாமுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை மடோனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். அந்த படத்தில், ‘‘சிலருடன் இருக்கும்போது மட்டும்தான் நாம் நாமாக இருக்க முடியும். அதுதான் உண்மையான சுதந்திரம். அப்படி ஒருவர் எனது வாழ்க்கையில் இருப்பது அதிர்ஷ்டம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மடோனா செபாஸ்டியனும், ராபி ஆபிரகாமும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. எனினும் மடோனா அதனை மறுக்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 6.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!!! (உலக செய்தி)
Next post தமிழ் நாட்டில் ஆச்சிர்யமூட்டும் 7 இடங்கள்!! (வீடியோ)