சினிமாவில் நடிப்பதால் மட்டுமே தலைவனாக முடியாது! (சினிமா செய்தி)

Read Time:3 Minute, 46 Second

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கி இருக்கும் படம் ‘மிக மிக அவசரம்’. பெண் காவலர்களின் அன்றாட பிரச்சனையை பேசும் இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:- “பொதுவாகவே காவலர்கள் பற்றிய ஒரு வெறுப்பு அனைவருக்குமே இருக்கிறது. காவல்துறையில் சில குறைகள் இருக்கிறது உண்மைதான். அதேசமயம் அதிகப்படியான பணிச்சுமை அவர்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது. இந்த படம் பார்த்துவிட்டு நீங்கள் சாலையில் போகும்போது பாதுகாவலுக்கு நிற்கும் பெண் போலீசாரை பார்த்தால் உங்களுக்கு அவர்கள் மீது மிகப்பெரிய மரியாதை ஏற்படும்.

இந்த படத்தை சிறந்த சமூக பார்வையாளனாக பெண் காவலர்களை பற்றி ஜெகன் உருவாக்கி இருப்பதும் அதை சுரேஷ் காமாட்சி படமாக இயக்கி இருப்பதும் எனக்கு பெருமையாக இருக்கிறது.

சினிமா ஒரு சாக்கடை என பேசிப்பேசியே தமிழ் பெண்கள் சினிமாவுக்கு வருவதை தடுத்து விட்டார்கள். சீரியலில் நடிக்க வரும் பெண்கள் கூட சினிமா பக்கம் வருவதற்கு யோசிக்கிற மாதிரி சூழலை உருவாக்கி விட்டார்கள்.

இன்று தொலைக்காட்சி விவாதங்களில் பேசும் அனைவரும் ரஜினி பற்றி பேசும்போது, தலைவருடன் நடித்தேன். தலைவருடன் பேசினேன். தலைவருக்காக கதையை தயார் செய்தேன் என அவரை எப்போதுமே தலைவர் என்றுதான் கூறுகிறார்கள். அவர் தலைவர் என்றால் பிரபாகரன், காமராஜர், கக்கன் போன்றவர்களெல்லாம் யார்? சினிமாவில் நடிப்பதால் மட்டுமே தலைவன் ஆக முடியாது அவர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமே.” இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் திருப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அதில் கலந்துகொள்ள வந்த வெளிமாநிலத்தவர் பலர் என்னிடம் பேசியபோது, நாங்கள் திருப்பூர், கோவை என பல இடங்களில் மிகப்பெரிய அளவில் தொழில்துறையில் முதலீடு செய்துள்ளோம். அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கும் 30 சதவீத இடங்கள் வேண்டும் என குரல் கொடுக்க இருப்பதாக என்னிடம் தெரிவித்தனர்.

அப்போது வந்ததே பாருங்கள் எனக்கு ஒரு கோபம். அந்த தீ இன்னும் அணையவில்லை. தென்னிந்திய பிலிம் சேம்பர் என்பதையும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதையும் தமிழ்நாடு பிலிம் சேம்பர், தமிழ் நடிகர் சங்கம் என பெயரை மாற்ற 25 வருடங்களாக போராடி வருகிறோம். இன்னும் அதை நிறைவேற்ற முடியாத நிலையில்தான் நாம் இருக்கிறோம்.” இவ்வாறு அவர் பேசினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ப்யூட்டி பாக்ஸ் !! (மகளிர் பக்கம்)
Next post சம்பந்தரின் கோரிக்கையும் சம்பந்தருக்கான கோரிக்கையும்!! (கட்டுரை)