வேலைக்கு விண்ணப்பித்த சன்னிலியோன் !! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 46 Second

பீகார் மாநில அரசின் பொது சுகாதார பொறியாளர் துறையில் காலியாக உள்ள 200 இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலை அந்த துறை தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. இதில் அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த பெயரை பார்த்ததும் விண்ணப்பித்த மற்ற அனைவரும் திகைத்தனர். அது சன்னிலியோன் என்றும் அவரது தந்தை பெயர் லியோனா லியோன் என்றும் இருந்தது.

பிரபல இந்தி நடிகை சன்னிலியோன். அவர் கனடாவில் பிறந்து அங்கு ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் இந்தி படத்தில் அறிமுகமாகி நடித்துவருகிறார். சிலர் இதுபற்றி துறை மந்திரி வினோத் நாராயண் ஜா கவனத்துக்கு கொண்டுசென்றனர். அவர், இது இறுதி பட்டியல் அல்ல, அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு இறுதி பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்றார்.

துறை செயலாளர் கூறும்போது, “சன்னிலியோன் யார் என்றே எனக்கு தெரியாது. அதை யாராவது குறும்புத்தனமாக வெளியிட்டிருக்கலாம். விரைவில் இதை சரிசெய்வோம்” என்றார். அதேபோல அந்த பட்டியலில் 2-வது இடம் பிடித்த சக்கரவர்த்தி என்பவரின் தந்தை பெயர் ஓம்புரி என்று இருந்ததும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை!! (மருத்துவம்)
Next post ஆண் என்ன? பெண் என்ன?(அவ்வப்போது கிளாமர்)