By 22 February 2019 0 Comments

சருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்!! (மருத்துவம்)

சருமத்தை சரியான முறையில் பராமரிக்க எல்லோருக்குமே ஆசைதான். ஆனால், அது எப்படி என்பதில்தான் ஆளுக்கொரு குழப்பம். போதாக்குறைக்கு ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்கள் வேறு இன்னும் அதிகமாகக் குழப்பிவிடுகிறது. என்னதான் செய்வது என்று இனி எந்த சஞ்சலமும் வேண்டாம்… உங்கள் சருமத்தின் தன்மையைப் புரிந்துகொள்வதும், அதனைப் பராமரிக்க சில எளிய வழிமுறைகளையும் கையாண்டாலே போதும். சருமத்தின் தன்மையைப் புரிந்துகொள்ள முதலில் நம் தோல் எந்த வகையைச் சேர்ந்தது என்பதை அறிய வேண்டும். அதன்பின், ஒருவருடைய வயது, எந்த மாதிரியான வேலையை அவர்கள் செய்கிறார்கள், எந்த ஊரில் அவர்கள் வசிக்கிறார்கள் மணல் பாங்கான இடமா, கடல் இருக்கும் இடமா போன்ற பல விஷயங்களைப் பொறுத்துத்தான் சருமப் பராமரிப்பு அமையும்.

வாழும் இடம் எதுவாக இருந்தாலும், சருமத்தைப் பொருத்தவரை மூன்று விஷயங்கள் பொதுவானவை. Cleansing சுத்தப்படுத்துதல், Moisturizing தோலின் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளுதல், Sun protection புற ஊதாக் கதிரில் இருந்து தோலை பாதுகாத்துக் கொள்ளுதல். தோலின் மேல்புறம் உள்ள அடுக்கு Stratum Corneum. இதில் உள்ள செல்களான Corneocytesஐ உதாரணத்துக்கு நாம் செங்கல்லாக எடுத்துக் கொண்டால், Lipid matrixதான் சிமென்ட். இந்த Lipid matrix ceramides மற்றும் Fatty acids கொண்டது. இதுதான் நம் தோலினுள் தண்ணீர் எளிதில் புகுந்துவிடாமல் தடுக்கிறது. அதுமட்டுமில்லாமல் தோலினுள் உள்ள ஈரப்பதத்தை ஆவியாகி வெளியேறாமல் தடுக்கவும் செய்கிறது. இந்த மூன்று விஷயங்கள் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்…

Cleansing

நம் சருமத்தில் உள்ள தேவையில்லாத பொருட்களை நீக்க தண்ணீரே போதும். ஆனால், எண்ணெய் பசையை நீக்குவதற்கு Cleansers தேவைப்படும். இந்த Cleansers ஆனது, நம் தோலில் உள்ள புரதங்கள் மீது சேர்ந்து தோலின் மேல் அடுக்கான Stratum Corneumஐ சிறிது வீங்கச் செய்துவிடும். இதனால் நம் தோலின் பாதுகாக்கும் திறனான Barrier Activity கொஞ்சம் சேதம் அடைந்து, தோலின் உள்ளே இருக்கும் நீர் சத்தானது வெளியேறிவிடும். இதன் விளைவாக ஒரு வறண்ட எரிச்சல் ஏற்படக்கூடிய தோலாக பின்பு மாறிவிடுகிறது. சாதாரண சோப்பே இந்த சேதத்தை ஏற்படுத்தும். வேறு சிலர் நார், கல், ப்ளாஸ்டிக் ப்ரஷ் போன்ற பொருட்களைக் கொண்டு சருமத்தைத் தேய்ப்பார்கள். அவ்வாறு தொடர்ந்து செய்யும்போது நாளடைவில் தோல் மிகவும் வறண்டு, ஒரு சிலருக்கு கறுத்தும் போகலாம். குளியல் சோப்பால் தோல் மிகவும் பாதித்துவிடக்கூடாது என்று Synthetic detergents ஆன Syndet என்ற ஒன்றை தயாரித்தார்கள். இது தோலில் உள்ள புரதம் மற்றும் எண்ணெயை தொந்தரவு செய்யாமல் (அல்லது கொஞ்சமாக தொந்தரவு செய்யும்) தோலின் pHக்கு இணையான ஒரு pHஐ கொண்டிருக்கும். திரவ நிலையில் உள்ள Liquid Cleansers ஆனது கழுவும்போதே மாய்சரைஸரை தோலில் படியச் செய்து தோலின் வறட்சியை போக்கும்.

Moisturizers

குளித்தவுடன் மாய்சரைஸர்களை தடவுவது அவசியம். இதைச் செய்வதால் தோல் சுத்தப்படுத்தப்பட்டவுடன் ஈரப்பதத்தை இழக்காமல் இருக்கும். காற்றில் ஈரப்பதம் குறைவாக இருத்தல், வெயிலில் தோல் படுவது, வயதாவது, ஹார்மோன்கள் மாறுவது போன்ற பலவித காரணங்களால் சருமம் வறண்டு போகும். அதனால் ரொம்பவும் பிசுபிசுப்பில்லாமல் மற்றும் விலை அதிகமில்லாத ஒரு நல்ல மாய்சரைஸர் க்ரீமோ / லோஷனோ தொடர்ந்து உபயோகப்படுத்த வேண்டும். இப்பொழுதெல்லாம் இவ்வகை க்ரீம்களில், தோலின் எண்ணெயான Ceramides போன்றவைகளைச் சேர்த்தே தயாரிக்கிறார்கள். BB creams என்று விற்கப்படும் Beauty Balm க்ரீம்களில், மாய்சரைஸர்கள் Foundation மற்றும் சன் ஸ்கிரீன் போன்றவற்றை சேர்த்தே செய்கிறார்கள். இது மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது.CC க்ரீம் என்ற Colour Correction க்ரீம்கள் பலவித ஷேடுகளில் கிடைப்பதால் ஒருவரின் நிறத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து உபயோகப்படுத்தலாம்.

UV protection

சூரிய ஒளி மற்றும் புற ஊதாக்கதிர்களில் இருந்து நம் தோலை பாதுகாக்க வேண்டும். பலரின் சந்தேகம், ‘டாக்டர்… நான் அதிகம் வெளியிலேயே போக மாட்டேன். எனக்கு எதற்கு சன் ஸ்கிரீன் க்ரீம்கள்?’.புற ஊதாக்கதிர்கள் என்பவை நம் வீட்டில் உள்ள Tube light வெளிச்சத்தில்கூட உண்டு. அதேபோல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், புற ஊதாக் கதிர்கள்(UV Rays) வந்துகொண்டுதான் இருக்கும். அதனால் மழைக்காலத்திலும் சன் ஸ்கிரீன் க்ரீம்கள் போட வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் சன் ஸ்கிரீன் கிரீம் UV `A’ மற்றும் UV `B’ இரண்டிலிருந்தும் தோலை பாதுகாக்கக் கூடியதாக இருக்க வேண்டும். SPF குறைந்தபட்சம் 15வது இருக்க வேண்டும். வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன் 1520 நிமிடத்திற்கு முன்பே இதனைத் தடவிக் கொள்ள வேண்டும். சரியான அளவு பயன்படுத்தத் தெரிந்து கொள்வதும் அவசியம். கொஞ்சமாக, போட்டுக் கொண்டால் தேவையான பலன் கிடைக்காது. 3 மிலி அளவுள்ள க்ரீமானது முகம், கழுத்து போன்ற இடங்களுக்கு தேவைப்படும். முடிந்தளவு பகல் 84 மணி வெயில் தோல் மீது படாமல் இருக்க வேண்டும். அதேபோல, துணி முழுக்கை சட்டை, தொப்பிகள், கண்ணாடி போன்றவற்றை அணிய வேண்டும். தண்ணீரின் அருகே, மலைப்பிரதேசத்தில் மற்றும் பனி படர்ந்த மலைகள் உள்ள இடங்களில் UV Rays அதிகம் இருக்கும். அதனால் எப்போதெல்லாம், எங்கெல்லாம் வெளியில் செல்கிறோமோ அப்போதெல்லாம் சன் ஸ்க்ரீன் க்ரீம்களை சரியான அளவு தடவிக்கொள்ள வேண்டும்.

எண்ணெய் பசை நிறைந்த சருமத்தை எப்படி பராமரிக்க வேண்டும்?

நம் சருமம் பல வித பொருட்களிடம் இருந்து நம்மை அரண்போல் பாதுகாக்க சருமத்தின் எண்ணெயான சீபம் என்பது மிக அவசியம். சீபத்தில் உள்ள Glycerol தோலின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். அதே சமயம் அந்த ஈரப்பதம் ஆவியாவதையும் தடுக்கும். நாம் உண்ணும் உணவைப் பொறுத்து (அதிக எண்ணெய் பசை மற்றும் கொழுப்பு மிகுந்த உணவை உண்டால்) சீபம் அதிகமாக சுரக்கக்கூடும். பொதுவாக, 1535 வயது வரம்பில் உள்ளவர்களுக்குத்தான் சீபம் அதிகமாக சுரக்கும். இந்த சீபம் ஆண்களுக்கு பெண்களைவிட அதிகமாக சுரக்கும். சீபம் அதிகமாக சுரக்கும்போது எண்ணெயாக தோல் பளபளப்பாகத் தெரியும். ஆனால், நேரம் ஆக ஆக தோலில் இருந்து உரிந்து வெளியேறும். Corneocytesயோடு கலந்த பின்பு முகம் மிகவும் பொலிவிழந்து மங்கலாகி மண் போன்ற படிவம் படிந்ததுபோல காட்சியளிக்கும்.

நம் ஊரில் பொதுவாக வெயில் அதிகமாக இருக்கும். அதுவும் கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் சீபம் அதே அளவுதான் சுரந்தாலும் அதனுடைய அடர்த்தியில் மாறுதல் ஏற்படுவதால் நிறைய சுரப்பதுபோல் தெரியும். எண்ணெய் பசை அதிகமாக உள்ள சருமத்திற்கு சாலிசிலிக் அமிலம் (Salicylic Acid) உடைய Face Wash உபயோகப்படுத்த வேண்டும். அதன்பின் அதிக எண்ணெய் சுரப்பு உள்ள நெற்றி, மூக்கு, வாய் பகுதியில் Toner உபயோகிக்க வேண்டும். அதன்பின் சீப சுரப்பை கட்டுப்படுத்தும் மாய்சரைசர்ஸ் மற்றும் சன் ஸ்கிரீன் ஜெல் பேஸில் உ்ள்ளதை உபயோகிக்க வேண்டும். அதன்மீது எண்ணெயை உறிஞ்சும் சாதாரண Talcum Powder கூட கொஞ்சம் போடலாம்.

வறண்ட சருமத்திற்கு என்ன செய்ய வேண்டும்?

ஏதாவது Eczema ஏற்பட்டால்கூட தோல் வறண்டு போகும். சில வகையான கிரீம்கள் உபயோகித்து அதற்கு ஒவ்வாமை ஏற்பட்டு, Allergic Contact Dermatitis ஏற்பட்டாலும் தோல் வறண்டு போகும். பிறப்பிலே சிலருக்கு Atopic Dermatitis அல்லது Ichthyosis போன்ற பிரச்னைகள் இருக்கும். இந்த இரண்டிலும் முதன்மையான விஷயம் வறண்ட தோல்தான். இதைத்தவிர தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்யும் Hypo thyroid நோயாளிகளுக்கும் தோல் வறண்டு இருக்கும். வறண்ட தோலில் எப்போதுமே Permeability Detect இருக்கும். அதாவது தோலில் இருந்து நீர்ச்சத்து எளிதாக வெளியேறிவிடும். அதேபோல் எந்தப் பொருளும் எளிதாக தோலினுள் செல்ல முடியும். அதனால் இவர்கள் உபயோகப்படுத்தும் க்ரீம்கள், சோப்பு எல்லாவற்றையும் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். Atopic dermatitis ஆல் பாதிக்கப்பட்டு தோல் வறண்டு இருந்தால் NMF என்று அழைக்கப்படும் Natural Moisturizing Factors உடைய க்ரீம்களை தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும். Ceramides உடைய க்ரீம்களும் நல்லது.

Liquid Paraffin கை, கால்களுக்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கும். வறண்ட சருமம் உடையவர்கள் Natural (OR) Acidic pH உள்ள சோப்பைத்தான் உபயோகிக்க வேண்டும். Alkaline pH உள்ள சோப்பு தோலை மிகவும் வறண்டு போகச் செய்யும். அதனால் Alkaline pH உள்ள சோப்பை இவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. அதே சமயம் இவர்கள் மிக சீக்கிரம் அதாவது 5 நிமிடத்திற்குள் குளித்துவிட வேண்டும். குளித்தவுடன் Moisturizer க்ரீமை தடவ வேண்டும். இவர்கள் உபயோகப்படுத்த வேண்டிய சன்ஸ்கிரீன் Cream Baseல் இருக்க வேண்டும்.

சென்சிடிவ் தோல் உடையவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இவர்களுக்கு எந்த க்ரீம்களும் பொதுவாக ஒத்துக் கொள்ளாது. சிவந்து, வறண்டு, எளிதில் எரிச்சல் அடையக்கூடிய தோலாக இருக்கும். அதனால் இவர்கள் உபயோகப்படுத்தும் Cleanser கூட ஈரப்பதத்தை அதிகரிக்கக்கூடிய, Emollient Rich Cleanser ஆக இருக்க வேண்டும். Moisturizer க்ரீம்களும் எந்த வாசனையூட்டியும் இல்லாத Fragrance Free Bland Moisturizerஆக இருக்க வேண்டும். கடினமான துண்டை உபயோகிக்கக் கூடாது. Scrubberஐ உபயோகப்படுத்தக் கூடாது. Syndet சோப்பு அல்லது க்ளென்சர்களை உபயோகிக்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவக்கூடாது. காஸ்மெடிக்ஸ் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். சன் ஸ்கிரீன் க்ரீமுக்குப் பதிலாக குடை பிடித்தல், தொப்பி அணிந்து கொள்ளுதல் போன்றவைகளை கடைப்பிடிக்க வேண்டும். அப்படி சன் ஸ்கிரீன் க்ரீம்கள் தேவைப்பட்டால் Physical சன் ஸ்க்ரீன் கிரீம்களை உபயோகிக்கலாம்.Post a Comment

Protected by WP Anti Spam