வானம் கலைஞர்களின் திருவிழா!! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 56 Second

வானத்தின் கீழ் அனைவரும் ஒன்றுதான். சாதி, மதம், மொழி, இனம் என எந்த வேறுபாடுகளும் இங்கு கிடையாது. வானம் அனைவருக்கும் சொந்தம். அந்த வானத்தின் பண்புகளைக் கொண்டது தான் இந்த வானம் கலைத்திருவிழா. அட்டக்கத்தி, காலா போன்ற படங்களை இயக்கிய பா.இரஞ்சித்தின் “வானம் பண்பாட்டு மையம்” ஒருங்கிணைப்பில் மூன்று நாட்கள் நடந்த வானம் திருவிழா மக்கள் வெள்ளத்தால் களைக் கட்டியது.

திருவிழாவில் இளைஞர்கள், மாணவர்கள், குடும்பங்கள் எனப் பல தரப்பில் இருந்தும் மக்கள் திரண்டு வந்திருந்தது, சாதிகள் இல்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது சாத்தியம் என்ற நம்பிக்கையை அளித்தது. ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக விழிப்புணர்வு பாடல்கள், நடனம், நாடகம், ஓவியம், இலக்கியம் என ஒரு பக்கமும், மறுபுறம் முறையாக அங்கீகரிக்கப்படாமல் அழிந்து வரும் கலைகளை மேடையேற்றிப் போற்றவும் இந்தக் களம் அமைந்திருந்தது. புதிய வருடத்தை கொண்டாடும் விதமாக கடைசி நாளில், ‘‘கேஸ்ட்லெஸ் கலக்டிவ்” குழுவின் இசை ஆல்பமான “மகிழ்ச்சி”யை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டார். இந்த 3 நாள் திருவிழா, திறமையான பல கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து, சிறப்பான மேடையை அமைத்துத் தந்திருக்கிறது. அப்படி அறிமுகமான இளம் பெண் கலைஞர்கள் சிலரை பார்க்கலாம்…

காவியா

சென்னையில் மூன்றாம் ஆண்டு பி.காம் படித்து வரும் மாணவியான இவர், முதன் முறையாக தான் வரைந்த ஓவியங்களை இங்கு காட்சிப்படுத்தியிருந்தார். “என் சொந்த ஆர்வத்தில் தான் பென்சில் ஓவியங்கள் வரையத் தொடங்கினேன். ஆயில், வாட்டர் கலர், அக்ரிலிக், தஞ்சாவூர் ஓவியம் என விதவிதமான ஓவியங்கள் வரைவேன். ஆனால் முறையாக பயிற்சி எதுவுமே இதுவரை எடுத்தது கிடையாது. இங்கு வந்த பின் 3040 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஓவியர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் தங்கள் அனுபவங்களை அழகாகப் பகிர்ந்து, தொடர்ந்து கலையை வளர்க்க ஊக்குவிக்கிறார்கள். பார்வையாளர்களுக்கு என் ஓவியங்களை காட்சிக்கு வைப்பது இதுவே முதல் முறை. இங்கு இருந்த மூன்று நாட்களுமே வித்தியாசமான அனுபவங்களையும், புரிதலையும் கற்றுக்கொடுத்தன. கடைசி நாளில் சினிமா நட்சத்திரங்கள், கலைஞர்கள் என பிரபலமானவர்கள் பலர் வந்தனர். அதில் சிலர் ஓவியங்களில் இருக்கும் நுட்பங்களையும் சொல்லி, தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்” என்றார். இவர் ஓவியங்கள் மட்டும் இல்லாமல், கைவினை பொருட்களும், பென்சில் சிற்பங்கள் செய்வதிலும் கைதேர்ந்தவர்.

பூர்ணிமா

ஐ.டியில் வேலை பார்த்து வந்தவர், இப்போது முழு நேர ஓவியராக மாறியுள்ளார். ‘‘இந்த மூன்று நாளில் இங்கிருக்கும் அனைத்து கலைஞர்களும் எனக்கு நண்பர்களாகி விட்டனர். எங்களை நாங்களே ஒருங்கிணைக்கும் எண்ணத்தில் இருக்கிறோம். நான் யுட்யூப் பார்த்துத்தான் வரைய கத்துக்கிட்டேன். ஆர்வம் இருந்தா என்ன வேணாலும் பண்ணலாம். ஓவியம் பிடிக்கும் என்பதால், அது சார்ந்த வொர்க்‌ஷாப்பில் பங்கெடுத்து, அடிப்படை நுட்பங்களை கற்றுக் கொண்டேன். தொடர்ந்து வரைந்து கொண்டு தான் இருக்கிறேன். 2014ல் நான் வரைய ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்றை கால ஓவியங்களை பார்க்கும் போது, நிறைய வித்தியாசம் உள்ளது. இந்த மூன்று நாள் கலைத்திருவிழா ஒரு பெரிய திருப்புமுனையாக எனக்கு அமைந் துள்ளது. நான் வரைஞ்ச காலாரஜினி படத்தை இயக்குனர் இரஞ்சித் சாருக்கு பரிசா கொடுத்தேன். நடிகர் விஜய்சேதுபதி ஓவியத்தை இப்போ பென்சில் கார்விங் கத்துக் கொண்டு இருக்கிறேன். பென்சிலில் பெயர்கள் எழுதுவேன். ஒரு எழுத்துக்கு நூறு ரூபாய் என்ற விலையில் பென்சில் கார்விங்கும் செய்து கொடுக்கிறேன்” என்றார். இவர் ஓவியத்தை பார்த்த இவரின் தாயாரும் இப்போது படம் வரைவதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார்.

லாவண்யா

“உருவப்படங்கள் வரைவதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். என்னால் முப்பது நிமிடங்களில் ஒருத்தருடைய படத்தை வரைந்து கொடுக்க முடியும். அவங்க புகைப்படத்தை வரைந்து கொடுக்கும் போது, அவங்களுக்கு அது ஒரு தனி சந்தோஷத்தை கொடுக்கும். வானம் திருவிழாவில், சுமார் முப்பது பேரின் உருவப்படங்களை வரைந்திருக்கிறேன். இது ஒரு தனி அனுபவம். நான் முதன் முதலில் பங்கெடுத்த நிகழ்ச்சி. சர்பிரைஸ் கிஃப்ட் கொடுக்கவும் சிலர் படங்கள் வரைய சொல்லி கேட்டுள்ளனர். நேராக முப்பது நிமிடங்கள் வரைந்து தரும் ஓவியங்களுக்கு 150 ரூபாய் வாங்குறேன்” என்கிறார். வாய்ப்புகள் கிடைத் தாலும் சரியான வழி நடத்தலும் இருந்தால் தான் கலைஞர்கள் அவர்கள் கனவை எட்ட முடியும். இந்த வானம் கலைத்திருவிழா இளம் கலைஞர்களையும் மக்களையும் இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அபிநந்தன் அனுபவித்த சித்ரவதைகள்!! (வீடியோ)
Next post வீட்டுக்குறிப்புக்கள் !! (மகளிர் பக்கம்)