அபிநந்தன் உடலில் பாகிஸ்தான் உளவறியும் சாதனங்களை பொருத்தியதா? (உலக செய்தி)

Read Time:2 Minute, 36 Second

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்திய விமானப்படை தளபதி தனோவாவை சந்தித்து பாகிஸ்தானில் தனக்கு நேர்ந்தது பற்றி விங் கமாண்டர் அபிநந்தன் விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து, டெல்லி ராணுவ வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி ராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அபிநந்தனை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து நலம் விசாரித்தார். அவரது குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார்.

இதற்கிடையில், பாகிஸ்தானிடம் சிக்கிய விமானப்படை வீரர் அபிநந்தன், தன்மீது அந்நாட்டு ராணுவத்தினர் உடல்ரீதியாக தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், மனரீதியாக நான் மிகவும் துன்புறுத்தப்பட்டேன் என தெரிவித்ததாக செய்திகள் வந்தன.

பாகிஸ்தான் உளவுத்துறையினர் அபிநந்தனின் உடலில் உளவுபார்க்கும் கருவி ஏதேனும் பொருத்தி அனுப்பியிருக்கலாம் என்ற யூகச்செய்திகளும் சில ஊடகங்களில் வெளியாகின.

இந்நிலையில், டெல்லி ராணுவ வைத்தியசாலையில் அவருக்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் முடிவுகளின்படி அபிநந்தனின் உடலில் உளவுபார்க்கும் கருவி ஏதும் பொருத்தப்படவில்லை. ஆனால், அவரது முதுகுத்தண்டு எலும்பின் கீழ் பகுதியில் ஒரு காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் இன்று குறிப்பிட்டுள்ளன.

பாகிஸ்தான் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட அபிநந்தனின் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் அவர் பாரசூட் மூலம் தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்ததில் இந்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குறைவான சுய இன்பம் நிறைவான மகிழ்ச்சி : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!! (அவ்வப்போது கிளாமர்)
Next post தொப்புள் கொடியில் ரத்தம் கசிதல் (umbilical cord bleeding ) (மருத்துவம்)