எண்டோஸ்கோப்பி என்பது என்ன? (மருத்துவம்)

Read Time:7 Minute, 43 Second

மருத்துவத்துறையில் மட்டுமே புழங்கிக் கொண்டிருந்த எண்டோஸ்கோப்பிஎன்கிற வார்த்தை, இப்போது பொதுமக்களிடமும் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் வார்த்தையாகிவிட்டது. இந்த எண்டோஸ்கோப்பி என்பது என்னவென்று இரைப்பை மற்றும்
குடலியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தாயுமானவனிடம் கேட்டோம்…

‘‘Endoscopy என்பது பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகளைக் குறிக்கும் ஒரு மருத்துவ வார்த்தை. இன்னும் எளிதாக விளங்கும் வகையில் சொல்ல வேண்டுமானால் நமது உடலுக்குள் அமைந்துள்ள உறுப்புக்களையும் நேரடியாகப் பார்ப்பதற்கு உதவி செய்யும் மருத்துவ உபகரணம்தான் எண்டோஸ்கோப்பி என்று குறிக்கப்படுகிறது.

எந்தெந்த உறுப்புக்கள் இந்தக் கருவியின் வழியாகப் பார்க்கப்பட்டு, பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதோ அவற்றின் பெயராலேயே அவை குறிக்கப்படுகின்றன. வயிறு, உணவுக்குழாய் மற்றும் சிறுகுடலை எண்டோஸ்கோப்பி கருவி துணையுடன் பார்க்கிற முறை Gastroscopy என குறிப்பிடப்படுகிறது. நுரையீரலைப் பரிசோதித்து என்ன மாதிரியான பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு சிகிச்சைகளைத் தருகிற முறை Bronchoscopy என அழைக்கப்படுகிறது.

1950-களில் இருந்தே, பயன்படுத்தப்பட்டு வருகிற Endoscopy Method தற்போது, மருத்துவ உலகில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி காரணமாக புதிய தொழில்நுட்பத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறது. தற்போது, இந்த சிகிச்சை முறையில் மூட்டு இணைப்புகள், சிறுநீர்ப்பை(Bladder), கருப்பை(Uterus), நுரையீரல் மற்றும் இதயச்சுவர்களுக்கு(Chest wall) நடுவில் அமைந்துள்ள பகுதி போன்றவற்றை பரிசோதனை செய்து, தகுந்த சிகிச்சைகள் தருவதற்கென்றே 13 வகையான சிகிச்சைகள் பயன்பாட்டில் உள்ளன. இதனால் நோயாளிகளுக்கு ஏராளமான பயன்கள் கிடைக்கின்றன.

முன்பெல்லாம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் உடலில் என்ன மாதிரியான பாதிப்பு உள்ளது? எந்தெந்த உறுப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளன என்பதைக் கண்டறிய தனித்தனியே சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டிய நிலை இருந்தது. அதன் பின்னர்தான் சிகிச்சை தரப்பட்டது. தற்போது எண்டோஸ்கோப்பியும், ஸ்கேனும் ஒரே கருவியில் Endoscopic Sonogram என்ற பெயரில் வந்துவிட்டது. இந்தக் கருவியின் துணையுடன் ஒருவருக்கு மஞ்சள் காமாலை வந்துள்ளதா என பரிசோதனை செய்து கொள்ளலாம். அதன் முடிவில், மஞ்சள் காமாலை(Jaundice) இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு இந்த நோயின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.

எண்டோஸ்கோப்பி மூலம் வயிறு, இதயம், நுரையீரல் என அனைத்து உறுப்புகளையும் நேரடியாகப் பார்த்து அல்சர், காசநோய், புற்றுநோய் மற்றும் தொற்று ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்க முடியும். அது மட்டுமில்லாமல் அந்தந்த உறுப்புகளின் சதையில் இருந்து மாதிரி ஒன்றை எடுத்து, மேலே சொல்லப்பட்ட பாதிப்புகளில் ஏதேனும் இருக்கிறதா என்பதையும் நிரூபிக்க முடியும். ஒருவருக்குக் குடல் புண் நோய் வந்துள்ளது என்பதையும் இக்கருவியின் துணையுடன் உறுதிப்படுத்த முடியும். மருத்துவத்துறை தற்போது அடைந்து வரும் வளர்ச்சி நிலையைப் பார்க்கும்போது, முந்தைய காலக்கட்டத்தைப்போன்று, ஸ்கேன் பண்ண வேண்டிய அவசியம் தற்போது இல்லை.

ரத்த வாந்தி எடுத்து நோயாளி அவதிப்படும்போது, அதற்கு என்ன காரணம் எங்கிருந்து ரத்தம் வெளியேறுகிறது என்பதையெல்லாம் எண்டோஸ்கோப்பி கருவியால் பரிசோதனை செய்து கண்டுபிடிக்க முடியும். மேலும், அப்பாதிப்பினைச் சரி செய்வதற்கான சிகிச்சைகளையும் மேற்கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல், உணவுகுழாயில் ஏற்பட்டுள்ள கேன்சரை இந்த மருத்துவ உபகரணம் மூலம்
குணப்படுத்த முடியும்.

கருவுற்றிருக்கும் இளம் தாய் மார்களுக்கும் எண்டோஸ்கோப்பி வழியாக சிகிச்சை செய்யலாம். தாய்மை அடைந்த பெண்கள் இந்த சிகிச்சை முறையைக் கண்டு தேவையில்லாமல் எதற்காகவும் பயப்படத் தேவையில்லை. இந்தப் பெண்களுக்கு ஏற்பட்டு இருக்கும் நோய்களின் தன்மையைப் பொறுத்து அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் தரலாம். அதேவேளையில், தாய்மை அடைந்த பெண்களுக்கு எதற்காக, எண்டோஸ்கோப்பி சிகிச்சை செய்யப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்வது முக்கியம்.

60, 70 வயதைக் கடந்தவர்களுக்கு அதிகமாக பசியுணர்வு இருக்காது. அதுமட்டுமில்லாமல், முதுமைப்பருவத்தினர் உடல் பருமனாலும் அவதிப்படுவார்கள். இவர்களுக்கு எண்டோஸ்கோப்பி சிகிச்சை முறைகள் எளிதாகப் பயன்படக்கூடிய நவீன சிகிச்சை முறையாக இருந்து வருகிறது. உடல் எடையைக் குறைக்கவும் புதிய தொழில் நுட்பத்துடன் வளர்ந்துவரும் இந்த சிகிச்சை முறை பயன்படுகிறது.

உடலின் உள்ளுறுப்புகளில் அளவுக்கு அதிகமாக வலி ஏற்படும்போது, என்ன காரணத்தால் வலி உண்டாகி இருக்கிறது, சிகிச்சை தரப்படும்போது, நோயாளிகளுக்கு வலி இருக்குமா, வலி எங்கு இருக்கிறது என்பதையெல்லாம் ஒரு சில நிமிடங்களிலேயே, கண்டுபிடித்துவிடக்கூடிய புதிய தொழில்நுட்பமாக எண்டோஸ்கோப்பி இருக்கிறது’’ என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெற்றிக்கு வயது ஒரு தடை இல்லை!! (மகளிர் பக்கம்)
Next post நியூஸிலாந்து தாக்குதலும் இலங்கை அனுபவமும் !! (கட்டுரை)