அதோமுக சுவானாசனம்!! (மகளிர் பக்கம்)
நாம் அனைவரும் நம் உடல் நலனையும், மன நலனையும் பாதுகாக்க பல்வேறு செயல் முறைகளையும், மருத்துவ முறைகளையும் கடைபிடித்து வருகிறோம். அந்த வகையில் நம் உடலுக்கும், மனதுக்கும் ஆழ்ந்த தொடர்பு உண்டு. தெளிவான மனம் வேண்டுமென்றால் நம் உடல் நன்முறையில் இருக்க வேண்டும் என சித்தர் திருமூலர் கூறுகிறார். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் எனும் சூழல்களினால் நம் உடலும், மனமும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
நம் உடலை நாமே பாதுகாத்துக் கொள்ள சித்தர்கள் கூறும் எளிய பயிற்சிதான் யோகாசனம்.நாம் நோய் போக்கும் பல ஆசனங்களின் பெயர் காரணம், செய்முறை மற்றும் பயன்களை தெரிந்து வருகிறோம். அவ்வரிசையில் இம்முறை ‘அதோமுக சுவானாசனம்’ பற்றி காண்போம்.
அதோமுக சுவானாசனம் பெயர் காரணம்:
அதோமுகம் என்றால் ‘கீழ்நோக்கும் முகம்’ என்றும், சுவானம் என்றால் ‘நாய்’ என்றும் பொருள். நாய் சோம்பலை முறிப்பதற்காக முதுகை நன்றாக நீட்டுவது போல் இவ்வாசனம் இருப்பதால் இப்பெயர் பெற்றது.
செய்முறை:
முதலில் குப்புறப்படுத்து மூச்சை நன்கு உள்ளழுத்து வெளியே விட வேண்டும். பின்பு இரு கால்களையும் ஒன்றாக சேர்த்து பின்பக்கமாக நீட்ட வேண்டும். அடுத்து இரு உள்ளங்கைகளையும் நெஞ்சுப் பகுதியோடு ஒட்டி தரையில் பதிக்கவும்.அப்போது விரல்கள் முன்நோக்கி இருக்க வேண்டும். பிறகு மூச்சை நன்றாக உள்ளிழுத்துக்கொண்டு தலை, இடுப்பு, பிட்டத்தை மேல் நோக்கித் தூக்கியபடி முதுகை நன்றாக வளைக்கவும். அடுத்து மூச்சை வெளிவிட்டுக் கொண்டே இடுப்பை மேல் நோக்கித் தூக்கி தலைப்பகுதியை உள்பக்கமாக கீழ் நோக்கி கொண்டு வந்து உச்சந்தலையை தரையில் பதிக்கவும்.
கால்கள் வளையாமல் பார்த்துக் கொள்ளவும். அப்போது கால் பாதங்கள் முழுமையாக தரையில் பதிந்திருக்க வேண்டும்.கைகளும் வளையாமல் நேராக இருக்க வேண்டும்.சுமார் 30 விநாடிகள் வரை இ ருந்த பின்பு முச்சை உள்ளிழுத்துக் கொண்டே குதிகால்களைத் தரையிலிருந்து உயர்த்தி, இடுப்பை கீழ்நோக்கி இறக்கி தலையை தரையிலிருந்து எடுக்க வேண்டும். இறுதியாக மூச்சை வெளிவிட்டுக் கொண்டே இயல்பு நிலைக்குத் திரும்பவும்.
பயன்கள்:
முதுகுப் பகுதியின் பிடிப்புகள், சுளுக்குகள் நீங்க உதவுகிறது. தொடைகளின் பின்பகுதி, முழங்கால், கணுக்கால் பகுதி மற்றும் முதுகு தண்டுவடப் பகுதியை வன்மையடையச் செய்கிறது. இரு கை மற்றும் கால்களுக்கு உறுதித் தன்மையை அளிக்கிறது. இவ்வாசனம் தோள்பட் டை வலியைப் போக்கி வலுப்படுத்தும் சிறந்த ஆசனம் ஆகும். தலைப்பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலுக்கு சுறுசுறுப்பை அளிக்கிறது.வயிற்றுப் பகுதியில் கொழுப்பு படிவதால் ஏற்படும் தொப்பையை குறைக்க உதவிகிறது.கழுத்து எலும்புகளை உறுதியடையச் செய்கிறது. இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் நோய்களை சரிசெய்ய உதவிகிறது.
Average Rating