சேது பத்தாசனம்!! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 0 Second

யோகாசனம் என்பது ஒரு விஞ்ஞான பயிற்சியாகும். ஐம்பொறி புலன்களால் மனம் சிதறிப் போகாமல் ஒருமைப்படுத்தி பேரின்பம் ஒன்றையே மனதில் நினைத்து இறைவனுடன் கலப்பதற்கு யோகாசனங்கள் பயன்படுகின்றன். உடலும், உயிரும் நீண்ட நாள் வாழ, நோய் வராமல் உடலைக் காக்க, நோய் வந்தாலும் அதை எளிதில் குணப்படுத்த யோகாசனம் உதவுகிறது. யோகாசனம் செய்தால் உடலும், மனமும், அமைதியடைகிறது. உடலை இளமையாக வைத்திருக்க ஆசனப் பயிற்சியே சிறந்தது. இது ஒரு மிகச் சிறந்த எளிய பயிற்சியாகும்.

யோகாசனம் என்பது உடலை நீட்டுதல், வளைத்தல், உடலின் இறுக்கத்தை தளர்த்துதல், ஆழந்த மூச்சு,இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துதல் நரம்புகளை ஊக்குவித்தல் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. பொருட்செலவு ஏதுமின்றி நம் உடலையும், மனதையும் நன்னிலையில் வைக்க சித்தர் பெருமக்கள் உருவாக்கிய நம் மருத்துவ முறையாகும். இது சித்த மருத்துவ முறையின் ஒரு பகுதியாகும்.

நாம் இயற்கைக்கு மாறாக பலவேறுபட்ட வேதிப்பொருட்கள் கலந்த உணவுகளை உண்பதாலும் அவசர வாழ்க்கை சூழலினாலும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். யோகாசனம் செய்வதால் உடல் நோயிலிருந்து விடுபட்டு நோயில்லா வாழ்லை வாழலாம். மன இறுக்கம் எப்போதும் ஆபத்தானது. யோகாப் பயிற்சி மன இறுக்கத்தை மற்றும் நரம்பு தளர்ச்சியை நீக்கி ஆரோக்கியத்தையும், அழகையும், இளமையையும் கொடுக்கிறது.

சேது பத்தாசனம் பெயர் வரக் காரணம்:

சேது என்றால் ‘பாலம்’ என்றும் பந்தம் என்றால் ‘கட்டுதல்’ அல்லது ‘நிறுத்துதல்’ என்று பொருள். இவ்வாசனம் பாலத்தைப் போன்று தோன்றுவதால் ‘சேது பத்தாசனம்’ என்று பெயர் பெற்றது.

சேது பத்தாசனம் செய்முறை:

முதலில் மல்லாந்து படுத்துக் கொண்டு இரண்டு கால்களையும் மடித்து புட்டத்துக்கு அருகில் வைக்கவும். கால் மூட்டுகள் வானத்தைப் பார்த்து இருக்க வேண்டும் வலது கணுக்காலை வலது கையாலும், இடது கணுக்காலை இடது கையாலும் பிடித்துக் கொண்டு, இரண்டு தோள்களுக்கு இடையே எவ்வளவு தூரம் இருக்கிறதோ அதே அளவு தூரம் கால் பாதங்களுக்கு இடையேயும் இருக்குமாறு வைக்க வேண்டும்.

இதே நிலையில் இருந்து கொண்டு மூச்சை ஆழ்ந்து உள்ளே இழுத்துக் கொண்டு இடுப்பு மற்றும் முதுகை தரையில் இருந்து மேலே தூக்கவும். ஆனால் பாதங்கள், கைகள், கழுத்து, தலையின் பின்பகுதி ஆகியவை தரையிலேயே பதிந்திருக்க வேண்டும். இதே நிலையில் சாதாரணமான சுவாசத்தில் 1 நிமிடம் வரை இருக்கவும்.பின்பு மூச்சை வென்விட்டுக் கொண்டே இடுப்பு மற்றும் முதுகை தரையில் இறக்கவும். கைகளின் பிடியைத் தளர்த்திக் கொண்டு இரண்டு கால்களையும் நீட்டவும். இவற்றை மூன்று முறை செய்யவும்.

சேது பத்தாசனத்தின் பயன்கள்:

இவ்வாசனம் உணவு செரிமான மண்டலத்தை சீராக்குகிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. நரம்பு மண்டலத்தை வலுவாக்குகிறது. கழுத்துப் பகுதியின் எலும்பை உறுதி செய்து கழுத்தைப் பலப்படுத்துகிறது. முகத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து முகப் பொலிவு பெறச் செய்கிறது. வயிற்றில் கொழுப்பு படியாமல் இவ்வாசனம் தடுக்கிறது. முதுகு தண்டை ஆரோக்கியத்துடன் வைக்க இது சிறந்த ஆசனம் ஆகும். இடுப்புப் பகுதி தசைகளை வன்மையடையச் செய்கிறது. கல்லீரல்,மண்ணீரல், கணையம், சிறுநீரகம் இவற்றை நல்ல நிலையில் இயங்கச் செய்கிறது. காலின் தசையை வலுவாக்கப் பயன்படுகிறது. இதயத் துடிப்பு மற்றும் இரத்த ஊட்டத்தை சீராக்க பயன்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி?! (மருத்துவம்)
Next post மோகத்திற்கு எதிரி முதுகுவலி! (அவ்வப்போது கிளாமர்)