வீட்டுக்கு மேக்கப்! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 27 Second

வெளியே டிராபிக், பொல்யூஷன், அலுவலக பிரஷர் எதுவாக இருந்தாலும், வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்ததும் ஒரு நிம்மதி ஏற்படும். அதற்கு காரணம் நாம் வசிக்கும் வீடு பார்க்க ரம்மியமாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும். சிலர் வீட்டுக்குள் நுழையும் போது ஆங்காங்கே துணிகள் மற்றும் புத்தகங்கள் இறைந்து இருக்கும். வீடு என்றால் அப்படித்தான் என்று சிலர் சொல்வார்கள். நாம் வாழும் வீட்டின் உள் அலங்காரம் எப்படி உள்ளதோ அதே போல் தான் நம் மனநிலையும் இருக்கும். வீட்டை அலங்காரம் செய்ய அதிக செலவாகுமா? வீட்டில் இருக்கும் சின்னச் சின்ன பொருட்களை கொண்டு எப்படி வீட்டை அழகாக்கலாம்? அது பற்றி விவரமாக கூறுங்களேன்?

ரெஜினா மேத்யு, நாமக்கல்.வீடு பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கட்டும். ஆனால், இருக்கும் இடத்தை அழகாக வைத்துக்கொண்டால், நான்குக்கு நான்கு அளவு கொண்ட வீடு கூட மாளிகையே என்கிறார் இன்டீரியர் டெகரேட்டர் சாந்தி.“பொதுவாகவே வீட்டுக்கு உள் அலங்காரம் செய்யும்போது அதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்யவேண்டுமா என்று பலர் திகைக்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவுமில்லை. குறைந்த செலவில் அழகாக நம் வீட்டை மாற்றி அமைக்க முடியும்.

அந்தக் காலத்தில் வீட்டில் துணிகளை வைக்க அலமாரி இருக்கும். அதில் துணிகளை அடுக்கி இருப்பது வெளிப்படையாகத் தெரியும். அதன் பின் பீரோ வந்தது. இப்போது கப்போர்ட். இதற்கு அறையின் சுவற்றில் தனியாக ஓரிடத்தை ஒதுக்கி விடுவதால், இடம் தாராளமாக கிடைக்கும். வார்ட்ரோப் தனியாக செய்யவேண்டும் என்றில்லை. வீடு கட்டும்போது அலமாரி வைக்க கடப்பாகல் கொண்டு பதிப்பார்கள். அதற்கு சட்டம் மற்றும் கதவு கொடுத்து அதை வார்ட்ரோபாக மாற்றலாம். சமையல் அறையை பொறுத்தவரை எல்லோரும் மாடுலர் கிச்சன் செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதாவது,அடுப்பாங்கரைக்கு தேவையான ஷெல்ப் எல்லாவற்றையும் செய்து பிக்ஸ் செய்ய நினைக்கிறார்கள். இதற்கு அதிகம் செலவாகும். இதற்கு பதில் மேடை அமைத்து அதில் தேவையான மாடல்கிச்சன் செட்டுகளை அமைத்துக் கொள்ளலாம்.

மரங்களில், பிளைவுட், ஹார்ட்வுட், எம்.டி.எப் போர்ட் என மூன்று வகைகள் உள்ளன. இதில் ஹார்ட்வுட் கிடைப்பதில்லை. விலையும் அதிகம். பிளைவுட் மரத்துண்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி அதை கட்டையாக அமைத்திருப்பார்கள். கடைசியாக எம்.டி.எப் போர்ட். பார்க்க மரம் போலவே இருக்கும். இதில் நாம் விரும்பும் டிசைன்கள் செய்துக் கொள்ளலாம். வீட்டை பொறுத்தவரை வரவேற்பறை பார்க்க அழகாக இருக்கவேண்டும். இங்கு இயற்கை நிறங்களான பிரவுன், மஞ்சள், ஐவரி, வெளிர் ஆரஞ்ச் போன்ற நிறங்கள் அடிக்கலாம். இது பார்க்க பிரகாசமாகவும், எல்லாரும் விரும்பக் கூடியதாகவும் இருக்கும். படுக்கை அறை என்பது நம் தனிப்பட்ட அறை என்பதால், விரும்பிய நிறங்களை அடிக்கலாம். சிலருக்கு பிங்க், லாவண்டர் பிடிக்கும்.

அதை இங்கு அடிக்கலாம். வரவேற்பறையில் நாற்காலிகள் மரத்தால் செய்திருந்தால், அங்குள்ள திரைச் சீலைகளிலும் மரச்சட்டம் வைக்கலாம். இப்போது மரத்தால் செய்யப்பட்ட பொருட்களை விட கண்ணாடியால் செய்த பொருட்களை வரவேற்பறையில் வைக்கிறார்கள். இது இருக்கும் இடத்தை பெரிதாக எடுத்துக்காட்டும். தரைக்கு பெரிய வெர்டிபைட் டைல்ஸ் போடுவது இப்போது வழக்கமாக உள்ளது. மார்பிள் மற்றும் கிரானைட் கற்களை விட இவை பல டிசைன்களில் வருவதால் பெரும்பாலான மக்கள் இதை விரும்புகிறார்கள். விலையும் குறைவு. வெளிர்நிறங்கள் பார்க்க அழகாகவும், அதே சமயம் அறைகளை பெரிதாகவும் எடுத்துக்காட்டும். வாஸ்துவை ஓரளவுக்கு கடைபிடிப்பதில் தவறில்லை.

வரவேற்பு அறையில் எப்போதும் டிவி வாசல் பக்கம் இருப்பது நல்லது. காரணம், டி.வி வாசலுக்கு எதிர் திசையில் இருக்கும் போது யார் வருகிறார்கள் என்று பார்க்க முடியாது. அதனால் வீட்டை பாதுகாக்க டிவியை இவ்வாறு வைப்பது நல்லது. கடைசியாக, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது ஒரு கலை. மாதம் ஒரு முறை வீட்டை ஒட்டடை அடிக்கவேண்டும். வாரம் ஒரு முறை வீட்டில் உள்ள டி.வி, அலமாரிகளை தூசி தட்ட வேண்டும். ஒருநாள் விட்டு ஒரு நாள் வீட்டை மாப் போட்டு துடைக்கலாம். இதை தவறாமல் கடைபிடித்தால் நம் வீடும் மாளிகை போல் மின்னும்…’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹெல்த் காலண்டர்!! (மருத்துவம்)
Next post இந்த பாம்பு எதை விழுங்கியிருக்குனு பாருங்க!! (வீடியோ)