குண்டு வெடிப்பில் 7 மாணவிகள் உட்பட 15 பேர் பலி!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 14 Second

ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் உள்ள சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள பல்வேறு புரட்சிப்படையினர் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்டை நாடான சவுதி அரசின் உதவியுடன் புரட்சிப்படையினர் மீது ஏமன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், சனா நகரின் கிழக்கு பகுதியில் உள்ள சவான் என்னுமிடத்தில் உள்ள ஒரு பண்டகசாலையில் நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதற்கு சவுதி தலைமையிலான விமானப்படைகளை புரட்சிப்படையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதேவேளையில், இச்சம்பவத்துக்கு காரணம் ஹவுத்தி புரட்சிப்படையினர் தான் என ஏமன் அரசு குற்றம்சாட்டுகிறது.

இந்த குண்டு வெடிப்பில் 7 மாணவிகள் உட்பட 15 பேர் உயிரிழந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முஸ்லிம்களுக்கு நட்டஈடு எப்போது? (கட்டுரை)
Next post பெண்களுக்கான உடற்பயிற்சிகள் என்னென்ன? (மகளிர் பக்கம்)