தனியாள் நிதி திட்டமிடல் !! (கட்டுரை)

Read Time:6 Minute, 47 Second

வாழ்க்கை நிகழ்வுகளும் நீங்களும்

பொற்கால ஓய்வுக்கான ஏற்பாடுகள்

காத்திரமான ஓய்வூதியத்திட்டம், நீண்டகாலப் பொறுப்புடன் நீங்கள் உங்கள் பொன்னான ஓய்வு காலத்ைத நெருங்கும் போது, மிகவும் அமைதியான வாழ்க்கை முறைைய அனுபவித்துக் கொள்ள முடியும்.

நிதி முன்னுரிமைகள்

ஒருவேளை நீங்கள் ஓய்வுகாலத்துக்கான திட்டமிடல்களில் ஈடுபட்டோ அல்லது அதனை அனுபவித்துக் கொண்டோ இருக்கக்கூடும். முதலுக்கான பாதுகாப்பு, விவேகமான நிதி மேலாண்மை, பொருத்தமான காப்புறுதி, உடன்படிக்கை போன்றன, உங்களுடைய முதன்மையான நிதி முன்னுரிமைகளாக அமைந்திருத்தல் வேண்டும்.

இருந்தும் நீங்கள் மேலதிகமாக ஓய்வூதியகால நிதியை அதிகரிக்க விரும்பினால், இடர்நேர்வுகளை உரியவாறு முன்கூட்டியே மதிப்பீடு செய்து, எச்சரிக்கை எண்ணக்கருவுக்கு அமைவாகத் தீர்மானங்ளை மேற்கொள்ள வேண்டும்.

தனியாள் நிதி மேலாண்மை அடிப்படைகள்

நீங்கள் எப்போது ஓய்வு எடுக்கப் போகின்றீர்கள், நீங்கள் விரும்புகின்ற வாழ்க்கையை வாழ்வதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் போன்றவற்றைத் தீர்மானித்து, நிதித் திட்டமிடலின் வழிநடத்தலுடன், நீங்கள் உங்களுடைய நிதி இலக்குகளை நோக்கிப் பயணிக்க முடியும். உங்களுடைய மாறுபட்ட நிதி முன்னுரிமைகளின் அடிப்படையில், காலக்கிரமமாக உங்கள் நிதித்திட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

உங்களுடைய ஓய்வுகால நிதித்திட்டமிடல்களை, வினைத்திறனாக மேலாண்மை செய்ய வேண்டும். நீங்கள் ஓய்வுக்கான வயது எல்லை​யை அடைந்தவுடன், உங்களுக்கான சட்டரீதியான கொடுப்பனவுகளான அரசாங்க உத்தியோகஸ்தருக்கான திரட்டப்பட்ட ஓய்வூதிய நிதி, தனியார் துறை ஊழியர்களுக்கான ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியத்​தைப் பாதுகாப்பாக முதலீடு செய்தல் தொடர்பாக கவனம் செலுத்துதல் வேண்டும்.

ஓய்வுகால வாழ்க்கையின் முக்கிய அங்கமாக, பாதீடானது அமைந்துள்ளது. தேவையேற்படின், குறிப்பட்ட செலவுகள் மிகவும் அவசியமற்றவை என, உங்களால் உணரப்பட்டால், அவற்றைக் காலம் தாழ்த்திச் செலவு செய்வதன் ஊடாக சேமிப்புகளை மீளவும் உயிர்ப்பிக்க முடியும்.

இன்றையக் காலகட்டத்தில், மருத்துவச் செலவுகள், குறிப்பிடத்தக்க அளவாக அமைந்து விடுகின்றன. உங்களுடைய வயது அதிகரித்துச் செல்லும்போது, மருத்துவக் காப்புறுதிக் கட்டுப்பணமும் அதிகரித்துவிடும். எனவே உரியகாலத்தில் மீளாய்வுக்கு உட்படுத்தி சேமித்துக் கொள்ள முடியும்.

உங்களால் பேணப்படும் நீண்டகால ஓய்வூதிய நிதியமானது, உங்களின் தேவைகளை உரியநேரத்தில் பூர்த்திசெய்யக் கூடியவாறாக அமையும் வகையில் முதலீட்டுத் தந்திரோபாயங்கள் காலத்துக்கு காலம் மீளாய்வுக்கு உட்படுத்தப்படல் வேண்டும். பேரினப் பொருளாதார விளைவுகளின் தாக்கம் முதலீடுகளை பாதிக்க வாய்ப்புண்டு.

உங்களுடைய சொத்துகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மூத்த குடிமகன்களை இலக்கு வைத்து செயற்படும் போலியான முதலீடுகள் தொடர்பில் கவனமாக இருங்கள்.

கிரமமான மீளாய்வு, முதலீட்டு திட்டம் நெறிப்படுத்தல்

உருவாக்கிய முதலீட்டு திட்டத்தைத் தொடர்ந்து, திட்டம் முழுவதும் கண்டிப்புடன் இணைந்து ஒழுக்கக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுதல் வேண்டும். உங்களுடைய பாதீடு, முதலீட்டுத் தேக்கத்தைக் காலத்துக்குக் காலம் மீளாய்வுக்கு உட்படுத்தி, உங்கள் தேவைகளுக்கு அமைவாக அமைந்துள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுடைய நிதி குறிக்கோள்களை, அடைவதற்குக் கிரமமாக உங்கள் முதலீட்டுத் தேக்கத்தின் பெறுபேற்றைக் காலத்துக்குக் காலம் மீளாய்வு செய்வதுடன், தேவை ஏற்படின் முதலீட்டுத் தேக்கத்தை மாற்றியமைப்பதன் ஊடாக, விரைவு படுத்திக்கொள்ள முடியும். அத்துடன், ஒரு துறையில் மட்டும் உங்கள் முதலீட்டுத் தேக்கம் தங்கியிருப்பதைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

நிதித் திட்டமிடல் ஒரு தொடர்ச்சியாக மாற்றமடையும் செயன்முறை

பொருளாதாரத்தில் அல்லது சந்தை நிலைமைகளில் எதாவது குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழந்தால் அல்லது உங்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படைகளில் உங்கள் திட்டத்​தை மாற்றியமைத்தல் இன்றியமையாதது.

அது மட்டுமன்றி, உங்களின் தேவை, வளங்களின் இயலளவு, சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதுடன் உங்கள் நிதி குறிக்கோள்களை நோக்கியப் பயணமாக அமைந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 45 அடி உயரத்திலிருந்து விழுந்த குழந்தை! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!! (வீடியோ)
Next post மாணவியை கிண்டல் அடித்த மாணவர்! கெத்தாக பதிலடி கொடுத்த மாணவி!! (வீடியோ)