தயக்கம் வேண்டாம் தடுப்பூசி போட!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 2 Second

காக்க… காக்க…

முக்கியமான தடுப்பூசிகளை அந்தந்த பருவ காலத்தில் போட்டுக் கொள்ளத் தவறினால் நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்றவற்றால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கும் நிலை ஏற்படலாம்…’’ என எச்சரிக்கிறார் குழந்தைகள் நல நிபுணர் ரெக்ஸ் சற்குணம். எந்தெந்த தடுப்பூசிகள் முக்கியமானவை? அவற்றை எந்தெந்த மாதங்களில் போடவேண்டும்? தெளிவுபடுத்துகிறார் அவர்.

பி.சி.ஜி. தடுப்பூசி டிபி எனப்படும் காசநோய் கிருமிகளை எதிர்த்துப் போராட குழந்தை பிறந்த அன்றோ, 3-4 நாட்களுக்குள்ளோ போட வேண்டும்.

பிறந்த குழந்தைக்கு BCG தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி ஊசி ஆகிய மூன்றையுமே ஒன்றாக ஒரே நேரத்தில் போட வேண்டும். போலியோ தடுப்பூசி பிறந்த 45, 75, 105 நாட்களில் கண்டிப்பாக போட வேண்டும்.

6, 9 மாதங்கள் முடிந்தவுடன் போலியோ சொட்டு மருந்தும், ஒன்றரை வயது முடிந்ததும் போலியோ தடுப்பூசி பூஸ்டரும் போடவேண்டும். 5 வயது முடிந்ததும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். மஞ்சள் காமாலை எதிர்ப்பு சக்தியாக பிறந்த உடனேயே போடப்படும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசியை, 6 மாதங்களுக்குள், குறைந்தது ஒரு மாதம் இடைவெளிவிட்டு 3 முறை கட்டாயம் போட வேண்டும்.

DPT என்று சொல்லப்படும் தொண்டை அடைப்பான் தடுப்பூசியை ஒன்றரை மாதத்தில் முதல் பூஸ்டரும், நான்கரை மாதத்தில் 2வது பூஸ்டரும் போட வேண்டும். பிறந்த 2வது, 4வது, 6வது மாதங்களில் HIB என்ற இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி போட வேண்டும். இது அரசு மருத்துவமனைகளில் கிடைக்காது. தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே போடப்படுகிறது. இந்த தடுப்பூசி அடிக்கடி வரும் ஃப்ளூ போன்ற தொற்று நோய்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும்.

குழந்தையின் 9வது மாதத்திலும், ஒன்றரை வயதிலும் தட்டம்மை, விளையாட்டம்மை, தாளம்மை நோய் தடுப்புக்கான MMR தடுப்பூசியையும் போடவேண்டும். மறுபடியும் இந்த MMR தடுப்பூசியை குழந்தையின் நான்கரை வயதில் மறக்காமல் போட வேண்டும்.

நிமோட்டோக்கஸ் பாக்டீரியாவால் உண்டாகும் நிமோனியாவை எதிர்க்க வாய் வழியே தடுப்பு மருந்து கொடுக்கப்பட வேண்டும். இது காற்றினால் பரவக்கூடிய நிமோனியா, மூளைக்காய்ச்சலால் வரக்கூடிய நிமோனியா இரண்டையும் தடுக்கக் கூடியது. குழந்தை பிறந்து 6 மாதங்களுக்குள் 3 முறை கொடுக்க வேண்டும்.

ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து, வயிற்றுப்போக்கை தடுக்கக்கூடியது. இதில் இரு வகை உண்டு. முதல் வகை ஒரு வயதுக்குள்ளான குழந்தைகளுக்கு 2 டோஸ் கொடுப்பார்கள். இரண்டாவது வகை ஒன்றரை மாதத்திலிருந்து 3 வயதுக்குள் 2 அல்லது 3 முறை கொடுக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எதிர்பாராமல் கண்டு பிடிக்கப்பட்ட 5 மர்ம அறைகள்!! (வீடியோ)
Next post கடினமான கணக்கும் எளிமையே..! (மகளிர் பக்கம்)