கொடூர எண்ணம் கொண்ட புலிகள் இயக்கத்தை நம்புவது எப்போதும் ஆபத்து -ஈபிஆர்எல்எப் டி.ஸ்ரீதரன்்
தில்லியில் அமைதி மற்றும் முரண்பாடுகள் ஆய்வு மையத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவர் டி. ஸ்ரீதரன்் பேசுகையில், கொடூர எண்ணம் கொண்ட புலிகள் இயக்கத்தை நம்புவது எப்போதும் ஆபத்து என்றார். வைகோவும், நெடுமாறனும் இலங்கையில் பிறந்திருந்தால், இந்நேரம் விடுதலைப் புலிகளே சுட்டுக் கொன்றிருப்பார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றார்.
முஸ்லிம் மக்கள், தங்களை தமிழர்கள் என்று அழைக்காமல், முஸ்லிம்கள் என அழைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அவர்களை அப்படிக் கூற வைக்கும் அளவுக்கு மனமுடையச் செய்த “பெருமை’ புலிகளையே சாரும் என்றார் அவர். இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் ஜனநாயகத்துக்கு இடம் கிடைக்க வேண்டும். அதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது என்றார் ஸ்ரீதரன்்.
இந்திய அரசு, தமிழகத்தின் அரசியல் நிலவரம் காரணமாகத்தான் இலங்கைப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிடத் தயக்கம் காட்டுகிறது என்று இலங்கைத் தமிழர் தலைவர்கள் தெரிவித்தனர். இந்திய வெளியுறவுத்துறை இணைச் செயலர் மோகன் குமார், இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் சி.ஆர்.ஜெயசிங்கே ஆகியோர் பங்கேற்றனர்.